Milk Halwa Recipe! 
உணவு / சமையல்

பால் அல்வா செய்முறை: ஆரோக்கியமும், சுவையும் அடடா!

கிரி கணபதி

இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் அதிகம் பிடிக்கும். அதிலும் குறிப்பாக அல்வா வகைகளை சாப்பிடாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். ஆனால் வெளியே வாங்கி சாப்பிடும் இனிப்புகளை விட வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதுவரை எத்தனையோ விதமான ஸ்வீட் வகைகளை நீங்கள் வீட்டில் செய்திருப்பீர்கள். 

ஆனால் ஒரு முறை இந்தப் பதிவில் நான் சொல்வதுபோல பால் அல்வா செய்து பாருங்கள். பால் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த அல்வாவை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த அல்வா செய்வது மிகவும் எளிது. சரி வாருங்கள் அற்புதமான சுவை கொண்ட பால் அல்வாவை எப்படி செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • 1/2 லிட்டர் பால் 

  • ½ கிலோ கற்கண்டு அல்லது சர்க்கரை

  • 1 ஸ்பூன் குங்குமப்பூ 

  • அலங்காரத்திற்கு சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம்.

  • 250 கிராம் நெய்

செய்முறை: 

முதலில் அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். பால் அடிப்பிடிக்காமலும் ஏடு கட்டாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே அவ்வப்போது பாலைக் கிளறி விடுங்கள். அரை லிட்டர் பால் கால் லிட்டராக சுண்டியதும் கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதுவரை பாலை நன்றாகக் காய்ச்சுங்கள்.

பின்னர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளற வேண்டும். அப்போது பால் மொத்தமாக திரண்டு கெட்டியாக மாறும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு போல காய்ச்சிக் கொள்ளுங்கள். இந்த கற்கண்டு பாகை பாலில் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருந்தால், கெட்டியான அல்வா பதத்திற்கு மாறிவிடும்.

இறுதியாக குங்குமப் பூவை பன்னீரில் சேர்த்து அரைத்து, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்த்துக் கிளறினால், சூப்பரான சுவையில் பாதாம் அல்வா தயார். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT