healthy recipes... Image credit - youtube.com
உணவு / சமையல்

மோர் ரசமும், கத்திரிக்காய் வெண்டைக்காய் காரக் கறியும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ளியை விரட்டும் தொண்டைக்கு இதம் தரும் சுவையான மோர் ரசம். இது செய்ய தக்காளி, பருப்பு, புளி எதுவும் தேவையில்லை.

சளியை விரட்டும் தொண்டைக்கு இதம் தரும் மோர் ரசம்:

மோர் ரெண்டு கப் 

உப்பு தேவையானது 

மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன்

ஓமம் 1/2 ஸ்பூன் 

பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன் 

அரிசி மாவு 2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு, கருவேப்பிலை, ஓமம் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் சிறிது

மோரில் அரிசி மாவு, உப்பு, மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் ஓமத்தை கையால் நன்கு கசக்கி சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைக்கவும். இதை கொதிக்க விட்டால் திரிந்தது போல் ஆகிவிடும். எனவே மொச்சு வரும் வரை கிளறிவிட்டு இறக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, ஓமம் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான மோர் ரசம் தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது சூப்பு போல் பருகலாம். ஆரோக்கியமான மோர் ரசத்துடன் காரசாரமான பொரியல் செய்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

கத்திரிக்காய் வெண்டைக்காய் காரக்கறி:

கத்திரிக்காய் 200 கிராம் வெண்டைக்காய் 100 கிராம் 

உப்பு தேவையானது 

புளி சிறு நெல்லிக்காயளவு 

சின்ன வெங்காயம் 10

தாளிக்க:

கடுகு, கருவேப்பிலை, நல்லெண்ணெய்

வறுத்து பொடிக்க: 

தனியா 2 ஸ்பூன் 

கடலைப்பருப்பு 1 ஸ்பூன்  

உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்   

மிளகு  1 ஸ்பூன்  

சீரகம் 1/2 ஸ்பூன்   

மிளகாய் 2

கத்திரிக்காய், வெண்டைக்காய் இரண்டையும் அலம்பி விரல் நீள துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு தனியா, மிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்தெடுத்து சிறிது ஆறியதும் கொரகொரப்பாக பொடிக்கவும்.

அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் காய்களை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்தூள் போடவும். புளிக்கரைசலையும் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து தட்டை போட்டு மூடி வதங்க விடவும். நன்கு வெந்து வந்ததும் பொடித்து வைத்துள்ள மசாலாவை தூவி இறக்கவும். மிகவும் ருசியான காரக்கறி தயார்.

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

SCROLL FOR NEXT