• பட்டாணியை ஊறவைத்து, உப்பு சேர்த்து, பாதி வெந்தவுடன் எடுத்து வடிகட்டி நிழலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தால் வெடிக்காமல் இருக்கும்.
• பாலை உறை ஊற்றும்போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியை கலந்தால் தயிரானது கெட்டியாகி இருக்கும்.• கஞ்சி காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, சிறிது சோயாபீன்ஸ் மாவைக் கலந்து கொடுத்தால் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும்.
• கொழுக்கட்டைக்கு பூரணம் தயாரிக்கும்போது நீர்த்துவிட்டால். அதில் அவல் அல்லது சேமியாவை தூளாக்கி கலந்தால் பூரணம் கெட்டியாகிவிடும்.
• ரவா தோசைக்கு 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து தோசை செய்தால் கூடுதல் மொறு மொறுவென இருக்கும்.
• எந்த வகையான ஊறுகாயும் செய்தாலும், சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் ஊற்றி வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
• பீட்ரூட் கறியில் பொட்டுக்கடலை பொடியை தூவினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
• குக்கரில் வேகவைத்த பச்சைப்பட்டாணி அதிகப்படி அதிகப்படியாக வெந்துவிட்டால் பட்டாணி மேல் ஐஸ்வாட்டர் ஊற்றி 5 நிமிடம் கழித்து எடுத்தால் சரியான பக்குவத்தில் இருக்கும்.
• ரசகுல்லா செய்த பின் குங்குமப்பூ, கேசரி பவுடர் கலந்து ஜீராவில் ஊறவைத்தால், நிறமும், மணமும் கூடுதலாக இருக்கும்.
• பாதாம் வைக்கும் டப்பாவில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு வைத்தால் பாதாம் பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
• எலுமிச்சம் பழத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிதுநேரம் கழித்து எடுத்து பிழிந்தால் இரண்டு மடங்கு சாறு கிடைக்கும்.
* கடுகெண்ணெயை வெண்டைக்காய் மீது தடவி வைத்தால் நீண்ட நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
• உள்ளங்கை, கை விரல்களில் எண்ணெய் தடவிய பிறகு பச்சைமிளகாயை நறுக்கினால் கை எரிச்சலைத் தவிர்க்கலாம்.
• பீங்கான் பாத்திரங்களை, பேக்கிங்சோடா அல்லது சோடா பைகார்பனேட் கரைத்த தேய்த்து அலம்பினால் பளபளப்பாக மின்னும்.
• உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது சோம்பை தூளாக்கி தூவினால் நன்றாக கமகமக்கும்.