வரகு பால் பாயசம் tamil.boldsky.com
உணவு / சமையல்

சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

வரகு பால் பாயசம்

தேவை: வரகு அரிசி - 2 டீஸ்பூன், பால் - 1½ கப் சர்க்கரை 4-5 டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வறுத்துக்கொள்ளவும். குக்கரில் பால் விட்டு மூடி ஒரு விசில் வரும் வரை விடவும். பிறகு சிம்மில் வைத்து இருபது நிமிடம் அடுப்பில் வைத்து, அடுப்பை அணைக்கவும்.

குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். இந்தப் பாயசத்தை சூடாகவோ, அல்லது ஆறிய பின் ப்ரிட்ஜில் சிறிது நேரம் குளிர வைத்தபின் ஜில்லென்றும் பரிமாறலாம். தேவையெனில் குங்குமப் பூவை சேர்த்துக்கொள்ளலாம்.

தினை பாயசம்

தினை பாயசம்

தேவை: தினை அரிசி - ¼ கப், வெல்லம் - ½ கப். பால் - 1 கப், நெய் - 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய்த் தூள் ஒரு சிட்டிகை, சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். வாணலியில் நெய் சேர்த்து, முந்திரி பருப்பைப் வறுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியில் தினை அரிசியைச் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு அல்லது 3 விசில் வரும்வரை குக்கரில் வேக விடவும். வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, ஐந்து நிமிடம் மறுபடியும் கொதிக்கவிடவும். வெந்த திணையைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஏலக்காய்ப் பொடி மற்றும் சுக்குப் பொடி, வறுத்த முந்திரியைச் சேர்க்கவும். நன்கு ஆறியவுடன், ஆற வைத்தப் பாலைச் சேர்க்கவும். அடுப்பில் வைத்துச் சூடாக்கக் கூடாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT