உணவு / சமையல்

இரண்டே நிமிடத்தில் குளிருக்கு இதமான மிளகு ரசம்!

சேலம் சுபா

ந்த குளிருக்கு இதமாக ரசம் வைக்க ஆசைதான். ஆனால் புளியை ஊறவைத்து, மிளகு ஜீரகம் அரைத்து, பூண்டு உரித்து என்று "அதற்கெல்லாம் எங்க நேரம் இருக்கு"  என்பவர்களுக்கு இந்த மிளகு ரசப்பொடி மிக்ஸ் வரப்பிரசாதம். ஒரு தடவை  செய்தோமா ஒரு மாசத்துக்கு எந்த பிரச்சனையும் இன்றி நினைத்த உடனே மிளகு ரசம் வைத்து அசத்தலாம்.

இதோ மிளகு ரசப்பொடி மிக்ஸ் செய்வதற்கு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:
குறுமிளகு -ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 
தனியா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
புளி - பெரிய சைஸ் நெல்லிக்காய் அளவு
பூண்டு- 4 பற்கள்
நெய் -சிறிதளவு ,
உப்பு -தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் – சிறிது

செய்முறை:

பொடிக்க 
ஒரு கடாயைக் காயவைத்து (எண்ணெய் வேண்டாம்) அதில் வெயிலில் காயவைத்து எடுத்த புளியை நன்கு வறுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றையும் லேசாக வறுத்து புளியுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும்.

ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் ஊற்றி அதில் இந்த மிளகு புளி மிக்ஸ் பொடியை கலந்து சூடானதும் தேவையான உப்புடன் நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு ஒரு கரண்டியில் நெய் தாளித்து அதில் நான்கு பூண்டு பற்களை தட்டி போட்டு பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க நுரை கட்டியதும் இறக்கவும் இறக்கவும். சூப்பரான மிளகு ரசம் இரண்டே நிமிடத்தில் தயார். 

இந்த மிளகு ரசப்பொடி மிக்ஸ் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும். ஈரம் படாமல் இருக்க வேண்டும். 

குறிப்பு: குறு மிளகு மருத்துவகுணம் நிறைந்தது. இல்லையென்றால் சாதாரண மிளகிலும் செய்யலாம். அதேபோல் காரம் தேவை எனில் பொடிக்கும்போதே 2 வரமிளகாய் சேர்க்கலாம். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT