Punjabi samosa 
உணவு / சமையல்

அல்டிமேட் டேஸ்டில் பஞ்சாபி சமோசா - சேமியா கேசரி ரெசிபிஸ்!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான பஞ்சாபி சமோசா மற்றும் சேமியா கேசரி ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

பஞ்சாபி சமோசா செய்ய தேவையான பொருட்கள்.

மசாலா செய்ய,

பச்சை மிளகாய்-2

சீரகம்-1 தேக்கரண்டி.

தனியா-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

இஞ்சி-1 துண்டு.

சாட் மசாலா-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

உருளை-2

பட்டாணி-1கப்.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

சமோசா செய்ய,

மைதா-1கப்.

உப்பு-தேவையான அளவு.

ஓமம்-1 தேக்கரண்டி.

வெண்ணெய்-2 தேக்கரண்டி.

பஞ்சாபி சமோசா செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் 2 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி தனியா, 1 தேக்கரண்டி சோம்பு, இஞ்சி 1 துண்டு, சாட் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும். இப்போது அதில்  வேக வைத்த உருளை 2, வேக வைத்த பட்டாணி 1 கப், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சிறிதளவு தூவி கிளறிவிடவும். இப்போது மசாலா தயார்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா 1 கப், உப்பு தேவையான அளவு, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துவிட்டு சூடான உருக்கிய வெண்ணெய் 2 தேக்கரண்டியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். மாவை நன்றாக திரட்டி உள்ளே செய்து வைத்திருக்கும் மசாலாவை சிறிது வைத்து மூடி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பஞ்சாபி சமோசா தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

சேமியா கேசரி செய்ய தேவையான பொருட்கள்.

நெய்-2 தேக்கரண்டி.

முந்திரி-10

திராட்சை-10

சேமியா-1கப்.

தண்ணீர்-1கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

சர்க்கரை-1கப்.

சேமியா கேசரி செய்முறை விளக்கம்.

முதலில் ஃபேனில் நெய் 2 தேக்கரண்டி ஊற்றி முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே நெய்யில் சேமியா 1 கப் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் தண்ணீர் 1 கப், குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா நன்றாக வெந்ததும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்றாகக்கிளறி கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான சேமியா கேசரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

ஐ.சி.எஃப் - சென்னையின் தலைசிறந்து விளங்கும் பெரும் தொழில் அடையாளங்களில் ஒன்று!

உலகப் புகழ் மாமல்லபுத்தில் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய 10 அரிய இடங்கள்!

மஞ்சள் தூளில் அபாயம்: ஈய அளவு அதிகரிப்பு!

இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் போதும் உங்கள் குழந்தையை தயக்கத்திலிருந்து மீட்டுவிடலாம்! 

‘வடை போச்சே...!' வடிவேலு சொன்ன இந்த வசனத்துக்குப் பின்னால் இத்தனைக் கதைகளா...?

SCROLL FOR NEXT