Ala Puttu and Ragi Idli Recipes Image Credits: YouTube
உணவு / சமையல்

டேஸ்டியான சேலம் ஸ்பெஷல் அலா புட்டு- ராகி இட்லி செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு மிகவும் சுவையான சேலம் ஸ்பெஷல் அலா புட்டு மற்றும் ஆரோக்கியமான ராகி இட்லியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

அலா புட்டு செய்ய தேவையான பொருட்கள்.

இட்லி அரிசி-1 டம்ளர்.

வெல்லம்-2 டம்ளர்.

தண்ணீர்-1/2 டம்ளர்.

நறுக்கிய தேங்காய்-1 கப்.

ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.

அலா புட்டு செய்முறை விளக்கம்;

முதலில் 1 டம்ளர் இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் வெல்லத்திற்கு ½ டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் வெல்லத்தை வடிகட்டி ஊற்றி விட்டு அத்துடன் அரைத்து வைத்திருக்கும் மாவையும் சேர்த்துவிட்டு இன்னும் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவையை அப்படியே கலந்துவிட்டுக் கொண்டிருந்தால் சிறிது நேரத்தில் கெட்டிப்பதத்திற்கு வரும். இப்போது இதில் பொடியாக நறுக்கிய தேங்காய் 1கப் சேர்த்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிண்டவும். மாவு கையில் ஒட்டாத பதத்தில் இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது குழிக்கரண்டியை வைத்து தட்டில் எடுத்து வைத்து ஆறவிட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான அலா புட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

ராகி இட்லி செய்ய தேவையான பொருட்கள்;

ராகி மாவு-500 கிராம்.

ரவை-250 கிராம்.

கடுகு-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

தயிர்-1 கப்.

ராகி இட்லி செய்முறை விளக்கம்;

முதலில் கடாயை அடுப்பில் வைத்து ராகி மாவு 500 கிராமை சேர்த்து நன்றாக வறுத்து  எடுத்துக்கொள்ளவும். இப்போது  ரவை 250 கிராமை நன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேன் வைத்து எண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு நன்றாக வதக்கி அதையும் மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது அதில் தேவையான அளவு உப்பு, தயிர் 1 கப், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் இட்லி பத்திரம் வைத்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை இட்லி போல ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ஆரோக்கியமான ராகி இட்லி தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT