Singapore style fried rice.
Singapore style fried rice. 
உணவு / சமையல்

சிங்கப்பூர் ஸ்டைலில் Fried Rice வீட்டிலேயே செய்யலாம்!

கிரி கணபதி

ம்ம ஊர் ஸ்டைல் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டு உங்களுக்கு அலுத்துவிட்டதா? அப்படியானால் வீட்டிலேயே சிங்கப்பூர் ஸ்டைலில் பிரைட் ரைஸ் செய்யலாம். குறிப்பாக இந்த ப்ரைட் ரைஸ் செய்வது மிகவும் சுலபம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். சரி இந்த சிங்கப்பூர் ஸ்டைல் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

தனியா தூள் - 1 ஸ்பூன் 

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 

எண்ணெய் - 2 ஸ்பூன் 

பூண்டு - 1 ஸ்பூன் 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

இஞ்சி - 1 ஸ்பூன் 

கேரட் - 1

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் குடைமிளகாய் - ½ கப்

பச்சை குடைமிளகாய் - ½ கப்

முட்டைகோஸ் - ½ கப்

சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 

சோயா சாஸ் - 2 ஸ்பூன் 

வெங்காயம் - 1

வெங்காயத்தால் - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மஞ்சள் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், மிளகுத்தூள் மிளகாய் தூள் ஆகிவற்றை ஒன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வதைக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கிய கேரட், குடைமிளகாய் வகைகள், துருவிய முட்டைக்கோஸ் அனைத்தையும் போட்டு அதிக தீயில் வதக்க வேண்டும். 

அடுத்ததாக இதில் மசாலா தூள் வகைகளை தேவையான அளவு உங்களுடைய சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை அதில் கொட்டி கலந்து விட்டு, மசாலாவை சரிபார்த்து தேவையானால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டால், சூடான சிங்கப்பூர் பிரைட் ரைஸ் தயார்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT