Ghado-Ghado 
உணவு / சமையல்

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

மும்பை மீனலதா

பாரம்பரிய இந்தோனேஷியா உணவாக விளங்கும் "Ghado -Ghado" சாலட், வெஜிடேரியன் மற்றும் வீகன்ஸ் (Vegans) சாப்பிடுவர்களிடையே பிரபலமானதாகும். சத்தான சாலட் ஆக மட்டுமல்லாது, உணவாகவும் விளங்குகிறது. நானும் சாப்பிட்டு பார்த்தேன். செம டேஸ்ட்.

அதன் செய்முறையை பார்க்கலாமா...?

தேவை:

Tofu - 250 கிராம்

பச்சைப் பீன்ஸ் 200 கிராம்

கேரட் 3

முளை விட்ட பயறு 250 கிராம்

வெள்ளரிக்காய் 1

உருளைக் கிழங்கு 3

சாஸ் செய்யத் தேவை:-

வறுத்த வேர்க்கடலை 1 கப்

பூண்டு 2 பல்

புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்

ஸோயா சாஸ் 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்

ப்ரௌன் சுகர் 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்

தேவையானது. வேர்க்கடலை சாஸ்

செய்முறை:

வறுத்த வேர்க்கடலை, பூண்டு, புளி பேஸ்ட், ஸோயா சாஸ், எலுமிச்சைசாறு, ப்ரௌன் சுகர், சிறிது உப்பு, தேவையான தண்ணீர் இவைகளை மிக்ஸியிலிட்டு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பல்சுவையாக இருக்கும்.

ஸாலட் செய்முறை:

டோபுவை சதுர வடிவில் கட் செய்து, ஃப்ரை செய்து கொள்ளவும்.

வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி ஸ்லைஸ் செய்யவும்.

பச்சை பீன்ஸ், கேரட் இவைகளை உப்பு நீரில் போட்டு, லேசாக வெந்தெடுக்கவும்.

உருளைக் கிழங்கை வெந்தெடுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.

பச்சை பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவைகளை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அழகான தயாரிப்பு முறை:

பெரிய ப்ளேட் ஒன்றில், கட் செய்த காய்கறிகளை முதலில் அரேன்ஞ் செய்து, பிறகு வெள்ளரிக்காய் ஸ்லைஸஸ், முளை விட்ட பயறு, ஃப்ரை செய்த டோபூ ஆகியவைகளை கலை நயத்தோடு வைக்கவும்.

இதன் மீது வேர்க்கடலை சாஸை எல்லாவற்றின் மீதும் படும்படியாக கோட்டிங் கொடுக்க வேண்டும். எக்ஸ்ட்ராவாக இருக்கும் சாஸை அருகே வைத்துக் கொள்ளவும்.

அழகாக தயாரித்து வைத்தவுடன், சாப்பிட மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும். கலர் ஃபுல்லாக இருப்பதுடன், மிகுந்த புரத சத்தும் கொண்டது. சாஸ் தேவைப்பட்டால், விட்டுக் கொள்ளலாம். இரண்டு பேர்கள் தாரளமாக சாப்பிடலாம்.

(சிலர், பாதி வெந்த முட்டையையும் (Half boiled) சேர்த்துக் -- கொள்கின்றனர்).

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT