Andra Vatha kuzhambu.
Andra Vatha kuzhambu. 
உணவு / சமையல்

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வத்தக் குழம்பு!

கிரி கணபதி

உணவுகளை முற்றிலும் புதிதாகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்ததாகும். அப்படி நீங்களும் யூட்யூபில் அல்லது இணையத்தில் பார்த்து பல உணவுகளை சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைலில் ஒரு வத்தக்குழம்பு ரெசிபி பார்க்கலாம். நீங்கள் ஒரு சைவ உணவுப் பிரியராக இருந்தால் இதை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள். அதுமட்டுமின்றி பொதுவாகவே வத்தக்குழம்பு என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதை இன்று நாம் ஆந்திரா ஸ்டைலில் காரமாக செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சுண்டல் வத்தல் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

வரமிளகாய் - 4

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 5 பல்

வெந்தயம் - ¼ ஸ்பூன் 

கடுகு - ½ ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன் 

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள் தூள் ¼ ஸ்பூன் 

மல்லி தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியை வெந்நீர் ஊற்றி நன்கு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதிலேயே வரமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். 

பின்பு நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து அது வதங்கியதும், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

இறுதியில் குழம்பு நன்கு கொதித்து கெட்டி பாதத்திற்கு வந்ததும், சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், சுவையான காரசாரமான ஆந்திரா வத்த குழம்பு ரெடி. 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT