ஸ்ட்ராபெர்ரி கேசரி
1. ரவை – 1/2 கப்
2. சீனி – 3/4 கப்
3. ஸ்ட்ராபெர்ரி பழம் –6
4. ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் - 1 டீஸ்பூன்
5.தண்ணீர் - 1/2 கப்
6. நெய் – 6 டீஸ்பூன்
7. முந்திரி – 8 - 10
8.ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்
9. உலர்திராட்சை - 5 - 7
செய்முறை;
1.முதலில் வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர்திராட்சை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
2.அதே நெய் வாணலியில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
3.கடாயில் 11/2 கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
4.தண்ணீர் கொதித்த பின்னர் ஸட்ராபெர்ரியை அரைத்து சேர்க்கவும், ஃபிளேவரும் சேர்க்கவும்.
5.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
6.இப்பொழுது சீனி சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும்.
7.நெய்யில் வறுத்த முந்திரி,உலர்திராட்சை சேர்த்து பரிமாறவும்.