Strawberry Lemonade 
உணவு / சமையல்

கோடைக்கு இதமான Strawberry Lemonade வீட்டிலேயே செய்யலாமே!

கிரி கணபதி

ஸ்ட்ராபெர்ரி லெமனேட், இந்த கோடைகாலத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் சுவையான அற்புத பானமாகும். மற்ற ஜூஸ்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஜூஸ் உண்மையிலேயே உடலுக்கு ஊட்டத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். இதை தேவையில்லாமல் கடையில் வாங்கிக் குடித்து பணத்தை வீணடிக்க வேண்டாம். எளிதாக வீட்டிலேயே எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்: 

  • 1 கப் பாதியாக வெட்டப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்கள்.

  • 1 கப் எலுமிச்சை சாறு. 

  • ½ கப் சர்க்கரை. 

  • 4 கப் தண்ணீர்.

  • ஐஸ்கட்டிகள்.

  • புதினா இலைகள் அலங்காரத்திற்கு.

செய்முறை:

முதலில் ஸ்ட்ராபெரி பழங்களை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த ஸ்ட்ராபெரி பேஸ்ட், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அடுத்ததாக இதில் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை முழுவதும் கரையும் வரை நன்கு கிளறுங்கள். 

உங்களது சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தும் ஒன்றாக கலந்ததும், கண்ணாடி கிளாசில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளை போடுங்கள், இறுதியாக மேலே கொஞ்சம், ஸ்ட்ராபெரி பேஸ்ட் அல்லது ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து, புதினா இலைகளை பயன்படுத்தி அலங்கரித்தால், வேற லெவல் சுவையில், ஸ்ட்ராபெரி லெமனேட் தயார். 

இந்தக் கோடை வெயிலுக்கு இதை அப்படியே எடுத்து குடித்தால், அட்டகாசமாக இருக்கும். இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இதன் சுவை நன்றாக இருக்க, அனைத்தும் ஒன்றாக கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இறுதியில் நீங்கள் மேலே போடும் ஸ்ட்ராபெரி பேஸ்ட் மற்றும் எலுமிச்சை சாறு மிகவும் முக்கியம். அதுதான் இந்த ஜூசுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். 

இந்த வெயிலுக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு, ஸ்ட்ராபெரி லேமினேட் செய்து கொடுத்தால், உங்களைப் போற்றி புகழ்வார்கள். அப்புறம் என்ன? ஒரே ஜாலிதான்…

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT