Fruit juices 
உணவு / சமையல்

சம்மர் ஸ்பெஷல் 8 ஜூஸ் ரெசிப்பீஸ்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மிக்ஸ் ஜூஸ்:

Juice

தேவையானவை:

  • நெல்லிக்காய் 2 

  • வெள்ளரிப்பிஞ்சு 1 

  • வாழைத்தண்டு 1 துண்டு

  • மாங்காய் 1 துண்டு

  • கொத்தமல்லி 1 கைப்பிடி

  • எலுமிச்சை சாறு 1 மூடி 

  • உப்பு சிறிதளவு

  • மிளகு 1/2 ஸ்பூன் 

  • சீரகம் பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, மாங்காய், வாழைத்தண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை அலம்பி துண்டுகளாகி 1 கப் நீர் விட்டு  மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். அதில் உப்பு, மிளகு, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு தண்ணீர் (4 கப்) விட்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாவோ அல்லது அப்படியே பருக சர்க்கரை நோய் கட்டுப்படும். தாகம் தணிவதுடன் உடலுக்கு சக்தியும் புத்துணர்ச்சியும் கொடுக்கும்‌.

சோடா - ஆப்பிள் ஜூஸ்:

Soda - Apple Juice

தேவையானவை:

  • புளிப்பான ஆப்பிள் 1

  • பட்டைத் தூள் 1/2 ஸ்பூன்

  • சர்க்கரை 2 ஸ்பூன்

  • சோடா  1 பாட்டில்

  • சுக்கு 1 சிட்டிகை 

  • உப்பு 1 சிட்டிகை

செய்முறை:

வாங்கி வந்த ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தது. சட்டென ஒரு ஐடியா தோன்ற ஒரு கப் நீரில் ஆப்பிளை வேக வைத்து நன்கு மசித்து வடிகட்டி அத்துடன் பட்டை தூள் 1/2 ஸ்பூன், சுக்கு, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான அளவு சர்க்கரை (2 ஸ்பூன்) கலந்து அதில் சோடா சேர்த்து பருக மிகவும் அருமையாக இருந்தது.

தர்பூஸ் - ஐஸ் ஆப்பிள் ஜூஸ்:

Watermelon - Ice apple juice

தேவையானவை:

  • தர்பூஸ் துண்டுகள் 1 கப் 

  • நுங்கு 2

  • எலுமிச்சம் பழம் 1 முடி

  • மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் 

  • உப்பு சிறிது

செய்முறை:

இனிப்பு சுவை இயற்கையாகவே கொண்டிருப்பதால் இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. தாராளமாக சாப்பிடலாம். இதில் கிளைசெமிக் குறைவாகவே உள்ளது.

நார்ச்சத்து, விட்டமின் சி, லைகோபீன், நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

ஐஸ் ஆப்பிள் எனப்படும் நுங்கில் விட்டமின் சி, விட்டமின் கே விட்டமின் ஈ, புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து மிகுந்துள்ளது.

தர்பூஸ் துண்டுகள், நுங்கு துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் அடித்து அதில் 1 மூடி எலுமிச்சம் பழச்சாறு கலந்து சுவையை கூட்ட உப்பு, மிளகு தூள் சேர்த்து பருகவும். கோடைக்கு ஏற்ற இதமான பானம் தயார்.

நாகப்பழம் ஜூஸ்:

Nagapalam juice

தேவையானவை:

  • நாகப்பழம் 20

  • உப்பு 1 சிட்டிகை

  • சர்க்கரை (அ) தேன் 2 ஸ்பூன்

  • எலுமிச்சம் பழச்சாறு 1 மூடி

செய்முறை:

நாகப் பழத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கையால் நன்கு கசக்க கொட்டைகள் தனியாக வந்து விடும். பிறகு மிக்ஸி ஜாரில் கொட்டை நீக்கிய நாகப்பழங்கள், உப்பு, சர்க்கரை, ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு அடிக்கவும். நைசாக அரைந்ததும் வடிகட்டி கிளாசில் ஊற்றி பருக ஆஹா அற்புதம்  என பாராட்டாதவர்கள் எவரும் உண்டோ?

நெல்லிக்காய் ஜூஸ்: 

Amla juice

தேவையானவை:

  • நெல்லிக்காய் 5

  • உப்பு 1/2 ஸ்பூன் 

  • சர்க்கரை (அ) தேன் தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிக்காயை நறுக்கி கொட்டையை எடுத்து விடவும். அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து விட்டு தேவையான அளவு தண்ணீர் உப்பு சர்க்கரை சேர்த்து விழுதாக அரைக்கவும். இப்பொழுது தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டி பருக மிகவும் சத்தான நெல்லிக்காய் பழச்சாறு தயார். இது தாகம் தணிப்பதுடன் சத்தும் மிகுந்தது.

கொய்யாப் பழ ஜூஸ்:

Guava juice

தேவையானவை:

  • கனிந்த கொய்யாப் பழங்கள் 3

  • சர்க்கரை 4 ஸ்பூன்

  • உப்பு 1 சிட்டிகை

  • எலுமிச்சம் பழச்சாறு 2 ஸ்பூன்

செய்முறை:

நல்ல கனிந்த கொய்யாப் பழங்களாக எடுத்து தோலை நீக்கி விடவும். பிறகு சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு, சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து முதலில் மிக்ஸியில் அடிக்கவும். பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து விதைகளை வடிகட்டவும். இப்பொழுது தேவையான அளவு நீர் சேர்த்து ருசிக்கேற்ப சர்க்கரையோ அல்லது தேனோ கலந்து பருகலாம்.

வில்வ பழ ஜூஸ்:

Vilvam fruit juice

தேவையானவை:

  • வில்வ பழம் ஒன்று 

  • நாட்டு சர்க்கரை 4 ஸ்பூன்

  • தேன் சிறிதளவு

செய்முறை:

வில்வப் பழத்தை உடைத்து ஓட்டிலிருந்து சதைப்பகுதியை ஸ்பூனால் எடுத்து விடவும். அத்துடன் 2 கப் நீர் விட்டு நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது தேனும் கலந்து பருக தாகம் தணிவதுடன் கோடையில் ஏற்படும் பலவகை உடல் உபாதைகளையும் தீர்க்கும்.

வெற்றிலை ஜூஸ்:

Vetrilai juice

தேவையானவை:

  • கார வெற்றிலை 4

  • குல்கந்து 2 ஸ்பூன் 

  • கல்கண்டு சிறிது

  • சோம்பு 1/2 ஸ்பூன்

செய்முறை:

வெற்றிலையில் காம்பு மற்றும் நுனிப்பகுதியை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும். அத்துடன் குல்கந்து, கல்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். நன்கு அரைந்ததும் ஒரு கப் நீர் விட்டு மேலும் விழுதாக அரைத்து வடிகட்டி தேவையான அளவு நீர் சேர்த்து பருக இது ஒரு சிறந்த ஆரோக்கிய பானமாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT