Mamidikaya pachadi and mango rasam recipes Image Credits: Vismai Food
உணவு / சமையல்

சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி - மாங்காய் ரசம் ரெசிபிஸ்!

நான்சி மலர்

ன்றைக்கு மிகவும் சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி மற்றும் மாங்காய் ரசம் எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

ஆந்திரா மாமிடிகாயா பச்சடி செய்ய தேவையான பொருட்கள்;

மாங்காய்-2

கடுகு-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 ½ தேக்கரண்டி.

தாளிப்பதற்கு,

கடுகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிது.

பூண்டு-6

வரமிளகாய்-2

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

நல்லெண்ணெய்-3 தேக்கரண்டி.

ஆந்திரா மாமிடிகாயா பச்சடி செய்முறை விளக்கம்;

முதலில் மாங்காய் 2 நன்றாக தோல் சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம் நன்றாக கிண்டிவிட்டு அடுப்பை ஆப் செய்துவிடுங்கள். இப்போது 1 தேக்கரண்டி உப்பு, 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிண்டி இறக்கவும். இப்போது இதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அரைத்த பவுடரை மாங்காயுடன் சேர்த்து நன்றாக கிண்டி விடவும். அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு நன்றாக பொரிந்ததும், ஜீரகம் 1 தேக்கரண்டி, 2 வரமிளகாய், கருவேப்பிலை சிறிது, பெருங்காயம் ½ தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். பூண்டு 6 தட்டி இத்துடன் சேர்த்து விட்டு பூண்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து மாங்காயுடன் சேர்த்து கிண்டிவிட்டு பரிமாறலாம். சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்;

மாங்காய்-2 கப்.

தண்ணீர்-2 கப்.

பச்சை மிளகாய்-2

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

நல்லெண்ணெய்-1/4 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி, கருவேப்பிலை- சிறிதளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

வரமிளகாய்-2

இஞ்சி- 1 துண்டு.

மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.

நெய்-2 தேக்கரண்டி.

மாங்காய் ரசம் செய்முறை விளக்கம்;

முதலில் குக்கரில் 1 தேக்கரண்டி துவரம்பருப்பு, சிறிதாக நறுக்கிய மாங்காய் 2 கப், தண்ணீர் 2 கப், மஞ்சள் பொடி ¼ தேக்கரண்டி, நல்லெண்ணை ¼ தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2 வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.

இப்போது பச்சை மிளகாயை தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் இருப்பதை மசித்து விட்டுக் கொள்ளவும். தண்ணீர் 2 கப், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இப்போது கடாயில்  நெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 2, பெருங்காயத்தூள் ¼ தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு சிறிதாக நறுக்கியது, மிளகுத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கிண்டி அதை கொதிக்கும் மாங்காய் ரசத்தில் சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவு தான், சூப்பரான மாங்காய் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை காண்டிப்பாகட்ரை பண்ணிப் பாருங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT