உணவு / சமையல்

டேஸ்டியான ஹெல்த்தி சூப்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டல் எடையை குறைப்பதுடன் தேவையான சக்தியையும் தரக்கூடிய சூப் இது. செய்வதும் சுலபம்.

தேவையான பொருட்கள் :

முருங்கை இலை ஒரு கைப்பிடி

கேரட் ரெண்டு

தக்காளி ரெண்டு

வெங்காயம் ஒன்று

பூண்டு 4 பற்கள்

மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்

சீரகம் 1/4 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு கொத்தமல்லி இலை சிறிது

செய்முறை :

கேரட், தக்காளி, வெங்காயம், முருங்கை இலை, பூண்டு ஆகியவற்றை நன்கு அலம்பி பெரிய துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

சிறிது ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அடி கனமான வாணலியில் அல்லது உருளியில் எண்ணெய் சிறிது விட்டு சீரகம் போட்டு வறுத்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மிளகுத்தூள், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி சூடாக பரிமாற சுவையான சூப் ரெடி.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT