payasam recipe 
உணவு / சமையல்

புது வருடம் வரப்போகுது... புது புது பாயசம் பண்ணலாம்!

கல்கி டெஸ்க்

ஓட்ஸ் பாயசம்

Oats Payasam

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் - 50 கிராம்

  • வெல்லம் (அ) சீனி 150கி

  • தேங்காய்ப்பால் (அ) கெட்டியான பால் -250 மில்லி

  • திராட்சை,

  • முந்திரி,

  • ஏலக்காய்,

  • பச்சை கற்பூரம்

செய்யும் விதம்:

ஓட்ஸை டால்டா விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் (அ) ஒரு ஆழாக்கு வெந்நீரில் வறுத்த ஓட்ஸைப் போட்டு கைவிடாமல் கிளறி, வெந்த பிறகு சீனி (அ) வெல்லம் போட்டு, கரைந்தவுடன், ஒரு கொதி வந்த பின்பு. தேங்காய்ப் பாலோ (அ) காய்ச்சிய பாலோ விட்டு இறக்கி, வழக்கம் போல் திராட்சை, முந்திரி (வறுத்தது). ஏலக்காய், பச்சைக்கற்பூரம் பொடிகள் போடவேண்டும்.

அரிசி சேமியா பாயசம்

Rice Semiya Payasam

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 1 ஆழாக்கு

  • தேங்காய் (சிறியது) முற்றியது-1.

  • பால் -½லிட்டர்,

  • தே. எண்ணெய் - 4 டீஸ்பூன்

  • வெல்லம் (அ) சீனி - 400கி

  • திராட்சை,

  • முந்திரி,

  • ஏலக்காய்

  • பச்சை கற்பூரம்

செய்யும் விதம்:

பச்சரிசியை 1½ மணிநேரம் ஊறப்போட்டு போட்டு தேங்காயைத் துருவிக் கொண்டு 1 சிமிட்டா சாதாரண உப்புச் சேர்த்து சல்லூாலில் அல்லது மிச்ஸியில் தண்ணீச் விட்டு அரைக்க வேண்டும். அரைத்ததை இட்லி மாவு பதம் போல் இருக்க வேண்டும். பிறகு அதை வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி (அடி பிடிக்காமல்) எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் முக்கால் பங்கு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.

கிளறியமாவை பெரிய பெரிய கொழுக்கட்டை போல் செய்து கொதித்த நீரில் வேக விட வேண்டும். நன்றாக வெந்தவுடன் மிதந்து வரும். அலுமென் நன்றாக வெந்துவிட்டது.

அவைகளைத் தேன்குழல் அச்சில் ஓமப் பொடியில் சூடாக எடுத்துப் பிழிய வேண் சீனியையோ (அ) வெல்லத்தையோ கரைய விட்டு பிறகு சேமியா போல் பிழிந்து வைத்துள்ள அரிசி சேமியாக்களைப் போட்டுக் கிளறி இலேசாக சிறை வேண்டும். பிறகு மீதமுள்ள பாலைவிட்டு வழக்கம்போல் முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய், பச்சை கற்பூரம் போட்டு இறக்கவும்.

ஆப்பிள் பாயசம்

Apple Payasam

தேவையான பொருட்கள்:

  • ஆப்பிள் - 1

  • சீனி - 150 கிராம்.

  • பால்- 1½டம்ளர்

  • வறுத்த முந்திரிப் பருப்பு - 10

  • திராட்சை -10,

  • ஏலக்காய்

  • பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

ஆப்பிளை தோலுடன் நறுக்க வேண்டும் உள்ளே உள்ள மெல்லிய தோல், விதைகளை எடுத்து விட வேண்டும். பிறகு ஆவியில் ஆப்பிள் துண்டங்களை வேகவிட வேண்டும். பிறகு(ஆறிய) எடுத்து தன்முக மசித்து, சீனியைப் போட்டு நன்றாகக் கிளறி, ஒரு கொதி வந்தவுடன் காய்ச்சிய பாலை விட்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகியன போட வேண்டும். அதேபோல் கொய்யாப்பழ பாயசமும் தயாரிக்கலாம்.

தக்காளிப்பழப் பாயசம்

Tomato payasam

தேவையான பொருட்கள்:

  • தக்காளிப்பழம் -4 (பெரியது)

  • சீனி - 150 கிராம்

  • பால் - 1½ டம்ளர்

  • வறுத்த முந்திரிப் பருப்பு - 10

  • திராட்சை,

  • ஏலக்காய்,

  • பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

தக்காளிப்பழத்தை நன்றாக நறுக்கி வெந்நீரில் சிறிதுநேரம் வைத்து, தோல் உரிக்க வேண்டும். பிறகு விதைகளை நீக்கிய சாறை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கொதி வந்தவுடன் சீனியைப் போட்டு கரைந்தபின் ஒரு கொதி வரும். அதன் பிறகு பால் (காய்ச்சியது) விட்டு இறக்கியதும் திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் முதலியன போட வேண்டும்.

கதம்ப பழப் பாயசம்.

Kadamba pazham payasam

தேவையான பொருட்கள்:

  • கிடைக்கத் கூடிய எல்லா வகை பழங்களும்-(மொத்தம் தோல், விதை நீக்கப்பட்டவைகள்- 1 டம்ளர்

  • சீனி - 150 கிராம்

  • பால்- 1½ டம்ளர்

  • வறுத்த முந்திரிப் பகுப்பு - 10

  • திராட்சை, ஏலக்காய், பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

கிடைக்கக் கூடிய பழங்களைத் தோல் விதைகளை நீக்கி, குக்கரில் 3 நிமிடங்கள் வேகவிட்டு, பிறகு நன்றாக மசித்து, சீனியைப் போட்டு நன்றாக கிளறி, ஒரு கொதி வந்தவுடன் காய்ச்சிய பாலை விட்டு இறக்கி திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் போடலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT