வள்ளிக்கிழங்கு வடைகறி 
உணவு / சமையல்

வாய்க்கு ருசியா... வள்ளிக்கிழங்கு வடைகறி!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

ள்ளிக்கிழங்கு - 250 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 4, பச்சை மிளகாய் - 4 அ 5, இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய்ப் பொடி - 2 ஸ்பூன், தனியா பொடி - 4 ஸ்பூன்  மற்றும் முந்திரிப் பருப்பு,  பிரிஞ்சி இலை, உப்பு, எண்ணெய்.

செய்முறை:

ள்ளிக்கிழங்கை அலம்பி குக்கரில் வேக வைக்க வேண்டும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்தபின் வடைக்கு அரைப்பது போல் அரைத்து வைக்க வேண்டும். வடை மாவு, வள்ளிக்கிழங்கு மசியல், சிறிது மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள வடை கலவையைப் பகோடாவைப் போல் கிள்ளி எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும்.

வாயகன்ற கனமான எவர்சில்வர் பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதில் தனியா பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பாகக் கொதித்து வந்தபின் அதில் பிரிஞ்சி இலையைப் போட்டுக் கலந்தபின், பொரித்து வைத்துள்ள பகோடாவைப்போடவும். இந்தக் கலவையை நிதானத் தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். நன்றாகக் கலந்தபின் இறக்கி வைக்க வேண்டும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் மீதி உள்ள வெங்காயம், முந்திரிப் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து வடைகறியின் மேல் கொட்டவும்.

இந்த வடைகறி, அப்படியே தட்டில் போட்டும் சாப்பிடலாம். அல்லது சப்பாத்தி, சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

- மீரா பாஷ்யம்.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT