Samayal recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

நாவை சுண்டி இழுக்கும் வெஜிடபிள் கோலாவும், புழுங்கல் அரிசி தட்டையும்!

இந்திராணி தங்கவேல்

வெஜிடபிள் கோலா செய்ய தேவையான பொருட்கள்:

கேரட் -இரண்டு துருவியது

முட்டைகோஸ் சன்னமாக நறுக்கியது -அரை கப் 

பீன்ஸ் சீவலாக சீவியது- அரை கப்

தேங்காய் துருவல் -ஒரு கப்

பொட்டுக்கடலைப்பொடி- அரை கப் 

அரிசி மாவு -ஒரு டேபிள் ஸ்பூன் 

கடலை மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம்- 12 

பூண்டு -ஏழு

மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்

வறுத்த கசகசா ,சோம்பு தலா- ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி- சிறிதளவு

உப்பு, எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:

கேரட், தேங்காய் துருவலுடன் கசகசா, சோம்பு மிளகாய்தூள், மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் பூண்டு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், இரண்டையும் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொண்டு அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் மாவு வகைகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டியது தான். கேரட்டுக்கு பதிலாக பீட்ரூட்டை மட்டும் சேர்த்து செய்தாலும் ருசியாகவும், சத்தாகவும் இருக்கும். குழந்தைகள் இவற்றை விரும்பி உண்பார்கள்.

புழுங்கல் அரிசி தட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி- அரை கிலோ

உளுத்தம் பருப்பு- 150 கிராம்

வெண்ணெய்- ரெண்டு டேபிள்ஸ்பூன் 

மிளகாய் வற்றல்- பத்து

கடலைப்பருப்பு- இரண்டு டேபிள் ஸ்பூன் 

தோல் நீக்கி உடைத்த வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம், கருவேப்பிலை- சிறிதளவு 

எண்ணெய், உப்பு -தேவைக்கு ஏற்ப

அரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும். உளுந்தை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அரைத்த அரிசி மாவுடன் உளுந்துமாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெண்ணெய், பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசையவும். பிசைந்தமாவை சிறுசிறு உருண்டைகளாக்கி  பால் கவரில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்தால் மொறுமொறுப்பான புழுங்கல் அரிசி தட்டை ரெடி!

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT