Yam Chops- Soya White Kuruma Recipe! Image Credits: YouTube
உணவு / சமையல்

விருதுநகர் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு சாப்ஸ்- சோயா ஒயிட் குருமா ரெசிபிஸ்!

நான்சி மலர்

விருதுநகரில் ஸ்பெஷலாக கல்யாண வீடுகளில் செய்யப்படும் சேனைக்கிழங்கு சாப்ஸ் மற்றும் சப்பாத்திக்கு டேஸ்டியான சோயா ஒயிட் குருமா ரெசிபிஸை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.

சேனை சாப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்.

சேனைக்கிழங்கு-2 கப்.

மஞ்சள் தூள்- சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

புளி தண்ணீர்- சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

சின்ன வெங்காயம்-1கப்.

தக்காளி-1

பட்டை-1

கிராம்பு-2

ஏலக்காய்-2

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

இஞ்சிபூண்டு விழுது-2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

மிளகு தூள்-1/2 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

முந்திரி-10

சேனை சாப்ஸ் செய்முறை விளக்கம்.

முதலில் சேனைக்கிழங்கை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சிறிது சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் சிறிது புளி தண்ணீர் சேர்த்து சேனைக்கிழங்கைப் பாதி வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அந்த சேனைக்கிழங்கை எண்ணெய்யில் தீயை மிதமாக வைத்து நன்றாக மொறு மொறுவென்று வரும் வரை வேகவைக்கவும். மிக்ஸியில் ஒரு கப் சின்ன வெங்காயம், 1 தக்காளி சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 4 தேக்கரண்டி சேர்த்து அதில் பட்டை 1, ஏலக்காய் 2, கிராம்பு 2, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து பொரிய விடவும். கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது செய்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கை இதில் சேர்த்து கிளறிவிட்டு ½ தேக்கரண்டி மிளகு தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து கிளறிவிட்டு கடைசியாக முந்திரி 10, கருவேப்பிலை சிறிதளவை பொன்னிறமாக எண்ணெய்யில் வறுத்து இத்துடன் சேர்த்துக்கொள்ளவும். சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் தயார். இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

சோயா ஒயிட் குருமா செய்ய தேவையான பொருட்கள்.

ஒயிட் பேஸ்ட் செய்ய,

தேங்காய்-1 கப்.

முந்திரி-10

இஞ்சி- 1 துண்டு.

பச்சை மிளகாய்-4

சின்ன வெங்காயம்-10

பட்டை-1

கிராம்பு-1

கசகசா-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

வெள்ளை கொண்டைக்கடலை-2 தேக்கரண்டி.

சோயா-2கப்.

குருமா தாளிக்க,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

பட்டை-1

கிராம்பு-1

பிரியாணி இலை-1

ஏலக்காய்-2

வெங்காயம்-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

புதினா-சிளிதளவு.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி- சிறிதளவு.

சோயா ஒயிட் குருமா செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் தேங்காய் 1 கப், முந்திரி 10, இஞ்சி 1 துண்டு, பட்டை 1, கிராம்பு 1, பச்சை மிளகாய் 4, சின்ன வெங்காயம் 10, கசகசா 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, வறுத்த வெள்ளை கொண்டைக்கடலை 2 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

சோயா 2 கப்பை நன்றாக தண்ணீரில் ½ மணி நேரம் வேகவைத்து தண்ணீரை பிளிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி, பட்டை1, கிராம்பு 1, பிரியாணி இலை 1, ஏலக்காய் 2 சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, புதினா சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

இப்போது சோயா, உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். டேஸ்டியான சோயா ஒயிட் குருமா தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT