கோதுமை பாதுஷா
கோதுமை பாதுஷா 
உணவு / சமையல்

கோதுமை பாதுஷா - தீபாவளி இனிப்பு!

இளவரசி வெற்றி வேந்தன்

தேவையான பொருட்கள்:

1.கோதுமை மாவு - ஒன்றரை கப்,

2.கெட்டியான நெய் - அரை கப்,

3.தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,

4.சமையல் சோடா - கால் டீஸ்பூன்,

5.சர்க்கரை - ஒரு கப்,

6.தண்ணீர் - அரை கப்,

7.எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1.சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.

2.வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய்யைச் சேர்த்து, மாவு உதிரியாக வரும் வரை கலந்து கொள்ளவும்.

3.தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

4.மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

5. சூடான சர்க்கரைப் பாகில் சேர்த்து 10- 20 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

6.கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

SCROLL FOR NEXT