Image credit - youtube.com
உணவு / சமையல்

சுவையான பன்னீர் புர்ஜி, ஆலு டிக்கி, மற்றும் தக்காளி பூண்டு பாஸ்தா செய்யலாம் வாங்க!

கலைமதி சிவகுரு

பன்னீர் புர்ஜி

தேவை:

பனீர்  _ 200 கிராம்

பெரிய வெங்காயம் _2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி _1 நறுக்கியது

பச்சை மிளகாய் _2 நறுக்கியது

கடுகு _ 1 ஸ்பூன்

சீரகம் _1 ஸ்பூன்

மஞ்சள் தூள்_ 1/2 ஸ்பூன்

வத்தல் தூள் _1 ஸ்பூன்

கரம் மசாலா_1 ஸ்பூன்

எண்ணெய் _3 ஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

செய்முறை:   பன்னீரை சிறு சிறு கட்டிகளாக பிசைந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கி சிறிது வேக விடவும். பின்னர் மஞ்சள் தூள், வத்தல் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி  உப்பு, பனீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

கலவை உலர்ந்து இருந்தால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்து கடாயை மூடி 2 நிமிடம் சமைக்கவும். 2 நிமிடங்களுக்கு பிறகு, மூடியை திறந்து கசூரி மேத்தா சேர்த்து (விரும்பினால்) கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரித்தால் பனீர் புர்ஜி தயார்.

ஆலு டிக்கி:

தேவை:

வேகவைத்த உருளைக்கிழங்கு _4

துருவியஇஞ்சி _1 ஸ்பூன்

நறுக்கிய பச்சைமிளகாய் _2

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

மல்லித்தூள் _1/2 ஸ்பூன்

ஆம்சூர்தூள் (உலர் மாம்பழத்தூள்) _1 ஸ்பூன்

கார்ன்ஃப்ளோர் _ 2 ஸ்பூன்

மஞ்சள்தூள் _1/2 ஸ்பூன்

கரம்மசாலாதூள் _1 ஸ்பூன்

உப்பு தேவைக்கு

செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கை ஆறியதும் ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து கட்டிகள் இல்லாதவாறு பிசைந்து எடுக்கவும். அத்துடன் இஞ்சி, மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், ஆம்சூர்தூள், கார்ன்ஃப்ளோர்தூள், மஞ்சள்தூள்,  கரம் மசாலாதூள் சேர்த்து தேவைக்கு உப்பு கலந்து கொள்ளவும்.

பின்னர் கலவையில் சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி சிலிண்டர் (டிக்கி) வடிவில் அழுத்தி  உருட்டி நெய் தடவிய தட்டில் வைக்கவும். ஒரு பரந்த கடாயில் எண்ணெய் சூடாக்கி இந்த டிக்கிகளை ஒவ்வொன்றாக பொரித்து பொன்னிறத்தில் வந்ததும் புரட்டி மறுபக்கமும் பொரிந்து வந்ததும் எண்ணெயை வடிகட்டி டிக்கிகளை காகித துண்டுடன் ஒரு தட்டில் மாற்றவும். ஆலு டிக்கிகள் தயார்.

தக்காளி பூண்டு பாஸ்தா

தேவை:

பாஸ்தா _130 கிராம்

தக்காளி _150 கிராம்

வெண்ணெய் _2 ஸ்பூன்

பூண்டுவிழுது 11/2 ஸ்பூன்

தக்காளிவிழுது _11/2 ஸ்பூன்

பூண்டு நறுக்கியது _1 ஸ்பூன்

கிரீம் சீஸ் _1/4 கப்

வோக்கோசு விதைகள் _11/2 ஸ்பூன்

ஆலிவ் விதைகள் _11/2 ஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

மல்லி இலைகள் _1 கைப்பிடி

செய்முறை: 

பேக்கேஜ் அறிவுறுத்தலின்படி பாஸ்தாவை வேகவைத்து பாஸ்தாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். தக்காளியை ஒரு பிளண்டரில் சேர்த்து அவை முழுமையாக ப்யூரி ஆகும் வரை  கலக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகவிட்டு அதில் பூண்டு சேர்த்து வதக்கி துருவியத் தக்காளி மற்றும் பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்க்கவும். மிதமான தீயில் 8 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும்.

ஆலிவ் விதைகள், பாஸ்தா தண்ணீர், வேக வைத்த பாஸ்தா, உப்பு, மிளகு, மற்றும் வோக்கோசு சேர்த்து நன்றாக கலந்து கிரீம் சீஸ் சேர்க்கவும். 2 நிமிடங்கள் சமைத்து சுவையான தக்காளி பூண்டு பாஸ்தாவை பரிமாறலாம்.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT