kitchen items
kitchen items 
உணவு / சமையல்

Splayd, Spife, Chopfork எல்லாம் என்ன தெரியுமா?

பாரதி

நாம் சமையலறையில் பயன்படுத்த எத்தனை எத்தனையோ நவீன  பொருட்கள் இப்போது வந்துவிட்டன. பொதுவாக நம் நாட்டில் பலரும் கையால் சாப்பிடும் பழக்கம்தான் அதிகம். காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது. இப்போது ஏராளமான ஸ்பூன்களும், முட்கரண்டிகளும், கத்திகளும் புது புது வடிவில் பல பல ரகங்களில் வந்துவிட்டன. அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேற்கத்திய கலாச்சார முறைப்படி கத்தி மற்றும் முட்கரண்டி என்று சொல்லப்படும் Forkதான் அவர்களுடைய பாரம்பரியம். அதேபோல் கிழக்கில் சாப்ஸ்டிக் (Chopstick) மற்றும் ஸ்பூன் பயன்பாடு பாரம்பரியமான ஒன்று.

சாப்பிட உதவும் உபகரணங்களை பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம்.

1. குறிப்பிட்ட உணவுக்கானவை.

2. கூட்டு சேர்க்கை உபகரணங்கள்.

3. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிபோடும்படியானவை.

1. குறிப்பிட்ட உணவுக்கானவை:

இந்த வகைப் பாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டைக் கொண்டதாக இருக்கும்.

Butter knife

1.Butter knife: இது வெண்ணெய்யை நறுக்க, தடவ பயன்படும் கத்தி.ஒருபக்கம் கரடுமுறடாகவும் மறுபக்கம் மென்மையாகவும் இருக்கும்.

Cake fork

2. Cake fork: இது கேக் அருந்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கத்தி. இந்த போர்க் மூன்று பிளவுகள் மட்டுமே இருக்கும்.

Soup spoon

3. Soup spoon: சூப் ஒரு நீராகார வகை உணவு என்பதால், இந்த ஸ்பூன் குழி வடிவில் சற்று அகலமாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.

Crab cracker

4.Crab (நண்டு) cracker :

நண்டை சுத்தம் செய்ய மற்றும் பிளவுப்படுத்த தயாரிக்கப்பட்டவை. இவை நண்டுடைய கொடுக்கின் வடிவத்தில் இருக்கும்.

Fish knife

5.Fish knife:

இது மீனின் மேல் உள்ள செதில்களை செதுக்குவதற்காக ஒரு பக்கமும், மறுபக்கம் அதனை வெட்டுவதற்கான வடிவமைப்புடனும் இருக்கும்.

Grape fruit knife and spoon

6. Grape fruit knife and spoon:

இதன் சுற்றுப்புரம் கரடுமுரடாக இருக்கும். ஆகையால் பழத்தின் தோல்களை அகற்றி ஸ்பூன் மூலம் எடுத்து சாப்பிட ஏதுவாக கொறடு வடிவத்தில் இருக்கும்.

Tongs

7.Tongs:

இது சர்க்கரை கட்டி எடுக்க மற்றும் சில காய்கரிகள் எடுக்க உதவும். இதன் முடிவில் இரண்டு பிடிமானங்கள் இருக்கும்.

Meat claws

8. Meat claws:

இது அசைவ உணவுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக முழு சிக்கன் போன்ற உணவுகளைப் பிளவு செய்ய உதவும்.

2. கூட்டு சேர்க்கை உபகரணங்கள்:

இது ஒரே வடிவில் இரண்டு வகை உணவுகள் சாப்பிட பயன்படுத்தப்படுவதாக இருக்கும்.

Chopfork / Fork chops

Chopfork / Fork chops:

இது ஒரு பக்கம் நூடுல்ஸ் சாப்பிட உதவும் chop stick இருக்கும். மறுபுறம் பன்னீர், முட்டை போன்றவை சாப்பிடும் fork இருக்கும். அசைவம் சாப்பிடும்போது அல்லது திட உணவுகள் சாப்பிடும் போது கட் செய்ய fork பயன்படுத்துவார்கள். Chop மூலம் எடுத்து சாப்பிடுவார்கள்.

Spoon and chopstick

Spoon and chopstick:

இது சூப் மற்றும் நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிட உதவும். சூப் சாப்பிட ஸ்பூன் மற்றும் நூடுல்ஸ் சாப்பிட chopstick.

Splayd

Splayd:

ஸ்பூன், போர்க் மற்றும் கத்தி ஆகிய மூன்றும் ஒரே வடிவத்தில் தயாரித்திருப்பார்கள். ஆகையால் கட் செய்து சாப்பிட, சூப் மற்றும் காய்கறி சாப்பிட உதவும் ஒரே வடிவம் தான் Splayd.

Spife

Spife:

இதில் ஸ்பூன் மற்றும் கத்தி சேர்ந்து இருக்கும்.

3. பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும்படியானவை:

சாப்பிட தேவையான பொருட்கள் அனைத்தும் ஒரு ‘செட்’ ஆக வழங்கப்படும். பொதுவாக இது ஹோட்டல் போன்ற இடங்களில்தான் பயன்படுத்துவார்கள். ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்துவதில்லை.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT