உணவு / சமையல்

தினம் ஒரு சுண்டல்

கல்கி

கட்டா மிட்டா சுண்டல்

ஆதிரை வேணுகோபால்.

தேவை:

வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்

கீறிய பச்சை மிளகாய் 4

வெல்லம் 1 சிறு துண்டு

எலுமிச்சை சாறு சிறிதளவு

தேங்காய் துருவல் கால் கப்

எண்ணெய் 2 டீஸ்பூன்

கடுகு கால் டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவையான அளவு.

செய்முறை

சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். வேகவைத்த சென்னாவில் சிறிது எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் வேக வைத்த சென்னாவை போட்டு சிறிது வதங்கியதும் அரைத்த சென்னா+ உப்பு சேர்க்கவும் எல்லாம் நன்கு வதங்கியதும் வெல்லக் கரைசலை சேர்த்து தேங்காய்த் துருவல்+ பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்க்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும். சுவையான கட்டா மிட்டா சுண்டல் ரெடி.

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT