உணவு / சமையல்

தேன் மெதுவடை

கல்கி

ஜெயஸ்ரீ நாகராஜன், திருவிடைமருதூர்.

நமக்கு சமையல் அவ்ளோ வராதுங்க! ஆனா எங்க அம்மா செய்யுற வடைக்கு நான் அடிமை ! அதை எப்படி செய்வாங்கன்னு சொல்றேன்.

உளுந்தை ஊற வெச்சி கையில ஒட்டமா எடுத்து மையா கெட்டியா அரைச்சுக்கணும். அதுல அரையும் காலுமா மிளகு இடிச்சி போட்டு, கொஞ்சம் உப்பு போட்டுக் கலக்கணும். அநத மாவை வாழை இலைல வச்சு வடையா தட்டி நடுவுல ஓட்டை போட்டு எண்ணையில பொறிச்சு எடுக்கணும். சூப்பரா நம்ம மொறுமொறு "மெதுவடை" தயார்!

இதுல என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா? விஷ்யம் இத்தோட முடியலீங்க! அந்த வடையை ஆறவிட்டு அது மேல முழுசா மூடுகிற அளவுக்கு எங்கம்மா தேனு ஊற்றி வெச்சிடுவாங்க. வடையில தேனு ஊறி.. ப்பா !! செம டேஸ்ட் !! வாராஹி அம்மனுக்கு நெய்வேத்யமாக படைப்பாங்க. அது மட்டும் இல்லாம இது பெண்களின் இடுப்பு எலும்புகளுக்கு அவ்ளோ நல்லதுங்க! செஞ்சி பார்த்து சாப்பிட்டு சொல்லுங்க!

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

SCROLL FOR NEXT