*குழந்தைகள் மட்டுமல்ல, வயதான பெற்றோர்கள் கூட விரைந்து நலம் பெற அவர்கள் சம்பந்தப்பட்ட நல்ல சம்பவங்களையோ, வாழ்க்கைக்கு அர்த்தமூட்டும், நம்பிக்கை அளிக்கும் பழைய வாழ்க்கை கனவுகளையோ கேட்டால் போதும், நோயாளிகளின் உடல் சீக்கிரம் குணமடைகிறது என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
* பகலில் அடிபட்ட காயங்கள் மற்றும் புண்கள் இரவில் ஆறுவதைக் காட்டிலும் 60 மடங்கு விரைவாக குணமடையும்படி நமது உடற் கடிகாரம் அதற்கேற்ப படைக்கப்பட்டு இருக்கிறது. என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
* மனிதன் சூரியன் மறையும் நேரத்தில் மூர்க்கத்தனமான செயல்களில் ஈடுபடுவதாக ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சூரியன் மறையும் நேரத்தில் மனிதனின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்கும் என்கிறார்கள்.
* எந்த முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றுடன் இருக்கும்போது எடுக்காதீர்கள். அது பாதகமான பலன்களையே தரும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ரூண்டி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள். பசியுடன் இருக்கும்போது மூளை மந்தமாக வேலை செய்வதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
* கழுத்தில் ‘டை' கட்டுவதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாக கருதுபவர்கள் பலர். ஆனால், ‘டை’ கட்டுவதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதாகவும் அதனால் டை கட்டுபவர்கள் படைப்பாற்றல் திறன் குறைவதாகவும் ஜெர்மனியின் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
* உங்கள் கைகள் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கிறதா? உங்களுக்கு இரத்த ஓட்ட குறைவு பிரச்னை வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் நச்சு செல்கள் அதிகரிக்கிறது என்று அர்த்தம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
* கார் பயணங்களை விட, பஸ் பயணமே மிகவும் பாதுகாப்பானது என்பதை மான்ட்ரியல் பப்ளிக் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பஸ் பயணங்களை விட கார் பயணங்களில் அதிகளவில் விபத்துக்களும், இரத்த காயங்களும் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
* வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே இதய ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்க்க முடிந்தளவு கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவை சேர்ந்த American Heart Association என்ற நிறுவனத்தின் ஆய்வு முடிவு இது.
* வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு இதயப் பிரச்னை ஏற்படும் அபாயம் 20 சதவிகிதம் குறைவாக இருக்குமாம். லண்டனைச் சேர்ந்த இதய நல மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் குறையும் தூக்க நேரத்தினை வார இறுதி நாள் தூக்கம் ஈடு செய்யும் விதமாக அமைந்திருப்பதால் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது அந்த ஆய்வு.
* உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிறு வயதிலிருந்தே சத்துள்ள உணவு வகைகளைத் தர வேண்டும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நோய்கள் வராது. அதேபோல மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மன நோய்களைத் தடுக்க முடியும். மன நோய்களை வராமல் இருக்கச் சிறுவர்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் சின்னச் சின்னக் கதைகளைச் சொல்ல வேண்டும். எந்த வயதிலும் சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம். கதை கேட்கும் பிள்ளைகள் மன நோய்களுக்கு ஆளாவதில்லை என்பதை அமெரிக்க மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.