4 kitchen tips. 
வீடு / குடும்பம்

பொங்கி வரும் பருப்பு, அணஞ்சி போகும் அடுப்பு... நச்சுனு 4 கிச்சன் டிப்ஸ்! 

கிரி கணபதி

கிச்சனில் வெகு நேரம் நின்று சமைப்பது மிகவும் கடினம் என்றால், அதைவிடக் கடினம் கிச்சனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது. அப்படி கிச்சனில் பொதுவாக நடக்கும் இரும்பு தொல்லை, குக்கரில் பருப்பு பொங்கி விடுவது, சிங்க்-ல் அடிக்கடி கரை படிந்து விடுதல் மற்றும் பாத்திரங்களில் துருப்பிடித்து விடுவது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1. குக்கரில் பருப்பு காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது அது பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். இதனால், குக்கரைக் கழுவுவதற்கும், கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கும் கஷ்டமாக இருப்பதால், இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். இதற்கு மிகவும் எளிதான தந்திரம் ஒன்றை நீங்கள் கையாளலாம். அதாவது இனி பருப்பு மற்றும் காய்கறிகளை குக்கரில் வேகவைக்கும் போது உள்ளே ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு வேக வையுங்கள். இப்படி செய்தால் குக்கரை விட்டு தண்ணீர் வெளியே பொங்கி வழியாமல் இருக்கும். 

2. அதேபோல நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்களில் துருப்பிடித்து விட்டதா? எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் போகவில்லையா? இதை எளிதாக சுத்தம் செய்ய, கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை துருப்பிடித்துள்ள இடத்தில் வைத்து உப்பு காகிதம் போட்டு தேய்த்தால், துருக்கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

3. அடுத்ததாக உங்கள் கிச்சனில் அதிகப்படியான எறும்புத் தொல்லை இருந்தால், இந்த சூப்பர் டிப்ஸ்சைப் பயன்படுத்தி எறும்புகளைத் தடுக்க முடியும். அரை லிட்டர் தண்ணீரில் கொஞ்சம் வினிகர் மற்றும் டிஷ் வாஷிங் லிக்விட் சேர்த்து கலந்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிறிதளவு பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து, கிச்சன் சுவர்களிலும் தரையிலும் ஸ்பிரே செய்து வைத்தால், எறும்புகள் வராமல் இருக்கும். 

4. உங்கள் வீட்டு சிங்க்-ல் கரைகள் பற்றிக்கொண்டு, பார்க்கவே அசிங்கமாக இருக்கிறதா. இதை சுத்தம் செய்வதற்கு முதலில் பேக்கிங் சோடாவை கரை உள்ள இடத்தில் தூவி, அதன் மீது எலுமிச்சை சாற்றைப் பிழிந்து விடுங்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து, ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்த்து கழுவினால் சிங்க் பளிச்சென மாறிவிடும். 

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT