5 Things to Consider When Buying a Washing Machine! 
வீடு / குடும்பம்

Washing Machine வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

கிரி கணபதி

வீட்டிற்கு வாஷிங் மெஷின் வாங்குவதென்பது குறிப்பிடத்தக்க முதலீடாகும். சந்தையில் கிடைக்கும் பல பிராண்டுகள் மற்றும் மாடல்களில், உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் சரியான வாஷிங் மெஷினைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் வாஷிங் மெஷின் வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய காரணிகள் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

  1. திறன் மற்றும் அளவு: ஒரு வாஷிங் மெஷின் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது அதன் திறன் மற்றும் அளவுதான். நீங்கள் வழக்கமாக எவ்வளவு துணிகள் துவைக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், அதைப் பூர்த்திசெய்யும் திறன் கொண்ட வாஷிங் மெஷின் தேர்ந்தெடுப்பது நல்லது. அதிக நபர்கள் இருக்கும் வீடுகள் அல்லது அதிகமாக துணிகளைத் துவைக்கும் குடும்பங்களுக்கு பெரிய திறன் கொண்ட வாஷிங் மெஷின் பொருத்தமானது. அதே நேரத்தில் சிறிய திறன் கொண்ட இயந்திரங்கள், தனிநபர் அல்லது சிறிய குடும்பங்களுக்கு பொருத்தமானது. 

  2. அம்சங்கள்: இன்றைய கால நவீன வாஷிங் மெஷின்கள், செயல்திறனை மேம்படுத்தும் வகையில் எளிதாக இயக்கக்கூடிய வசதிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. விரைவாக துணி துவைத்தல், மாடரேட், டெலிகேட் ஹெவி டியூட்டி மற்றும் எக்கோ மோட் போன்ற விருப்பங்கள், பல வாஷிங் மெஷின்களில் அம்சங்களாக வழங்கப்படுகின்றன. மேலும், கூடுதலாக ஊறவைத்தல், நீராவி சலவை மற்றும் ஆன்டி ஜெர்ம் ப்ரொடெக்சன் போன்ற அமைப்புகள் உங்கள் தேவைக்கேற்ப இருக்கும். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு சரியான இயந்திரத்தைத் தேர்வு செய்யவும். 

  3. ஆற்றல் பயன்பாடு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மின்சார செலவு சேமிப்பு நோக்கங்களுக்காக அதிக ஆற்றல் திறன்மிக்க வாஷிங் மெஷின்களை கருத்தில்கொள்ள வேண்டும். இதற்காக அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட வாஷிங் மெஷின்களைத் தேர்ந்தெடுங்கள். இவை குறைந்த மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. தானியங்கி, வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் Eco-friendly போன்ற ஆற்றல் திறனுள்ள அம்சங்களைக் கொண்ட வாஷிங் மெஷின்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், உங்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க உதவும். 

  4. சத்தம் மற்றும் அதிர்வு: வாஷிங் மெஷினின் சத்தம் மற்றும் அதிர்வு அளவை கவனியுங்கள். குறிப்பாக நீங்கள் வாஷிங் மெஷின் வைக்கும் இடம் உங்களது படுக்கை அறைக்கு அருகில் இருந்தால், இதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எனவே குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் மற்றும் Anti Vibrate அம்சங்கள் கொண்ட இயந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 

  5. ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை: வாஷிங் மெஷின் என்பது ஒரு நீண்ட காலம் முதலீடாகும். எனவே அதன் ஆயுள் மற்றும் நம்பகத்தன்மைக்கு அறியப்பட்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பல்வேறு பிரபலமான பிராண்டுகள் மற்றும் மாடல்களின் வாடிக்கையாளர் ரிவியூவ்களை ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளை அளவிடுங்கள். நல்ல தரம் மற்றும் வாரண்டி கவரேஜ் கொண்ட இயந்திரங்களைத் தேர்ந்தெடுங்கள். நல்ல பிராண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும்போது, அடிக்கடி பழுது பார்ப்பது அல்லது அதிக பராமரிப்பதற்கான தேவை குறையும். 

Samsung 10 Kg 5 Star Ecobubble Wi-Fi Inverter Fully Automatic Top Load Washing Machine (WA10BG4686BRTL, Rose Brown), Bubble Storm & Super Speed Technology

LG 9 Kg 5 Star Inverter Fully-Automatic Top Load Washing Machine (THD09NPF, Middle Free Silver, AIDD Technology)

Samsung 8 Kg, Eco Bubble Technology, Super Speed, Wi-Fi, Soft Closing Door, Fully-Automatic Top Load Washing Machine (WA80BG4546BDTL, Versailles Gray, Awarded as Washing Machine Brand of the year)

LG 8 Kg 5 Star Inverter TurboDrum Fully Automatic Top Loading Washing Machine (T80SKSF1Z, Waterfall Circulation, Digital Display, Middle Free Silver)

Whirlpool 8 Kg 5 Star Stainwash Royal Plus Fully Automatic Top Load Washing Machine (SW ROYAL PLUS H 8 KG GREY 10YMW with In-Built Heater)

Bosch 8 kg 5 Star Fully-Automatic Front Loading Washing Machine (WAJ28262IN, Silver, AI active water plus, In-Built Heater)

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT