Don't tell these 5 dialogues to your partner Image Credits: aquamarinum.com
வீடு / குடும்பம்

உங்கள் பார்ட்னரிடம் தவறிக்கூட சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

நான்சி மலர்

ணவன், மனைவிக்குள்ளோ அல்லது காதலன், காதலிக்குள்ளோ அன்யோன்யம் இருக்க வேண்டும் என்றால், சரியான புரிதல் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுக்கும் பழக்கம் இருக்கும்போது கண்டிப்பாக அந்த உறவு வலிமையுடன் காலங்கடந்து நிற்கும். அதற்காக நாம் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களும் இருக்கின்றன. உங்கள் பார்ட்னரிடம் மறந்துக்கூட சொல்லிவிடக்கூடாத 5 டயலாக்ஸ் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ‘நீ எப்பவுமே இப்படித்தான்?’ உங்கள் பார்ட்னர் உங்களுக்காக எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் செய்த ஏதோ ஒரு தவறை வைத்துக்கொண்டு, ‘நீ எப்போதுமே இப்படித்தான்’ என்று சொல்லும்போது இதுவரை அவர்கள் செய்த நல்ல விஷயமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? என்பது போல தோன்ற ஆரம்பித்து விடும். என்ன செய்தாலும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது என்கிற மன நிலைக்கு வந்துவிடுவார்கள். உங்களுக்காக முயற்சி எடுத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டு விடுவார்கள். எனவே, அவ்வாறு கண்டிப்பாகக் கூறக் கூடாது.

2. ‘Don’t be so sensitive’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் அவர்களின் உணர்வுகளையே புரிந்துக்கொள்ளாமல் பேசுவது போல உணர்வார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டுவிட்டு இருவரும் கலந்து ஆலோசித்து, அந்தப் பிரச்னைக்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் பார்ட்னருடைய உணர்வுகளை Ignore செய்யக் கூடாது.

3. ‘என்ன விட்டுட்டு போகலாம்னு பாக்குறியா?’ இப்படிக் கேட்கும்போது, இது உங்கள் அடிமனதில் இருக்கும் Insecurityஐ காட்டுகிறது. ஏதாவது பிரச்னை வந்தால் நம்மை விட்டுவிட்டு போய் விடுவார்களோ? என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் இருப்பதால்தான் இதுபோன்ற கேள்விகளை அடிக்கடி கேட்பீர்கள். ஆனால், இதை அடிக்கடி கேட்கும்போது, உங்கள் பார்ட்னருக்கு இது எரிச்சலை உண்டாக்கும்.

4.நீ என்னை உண்மையாகக் காதலித்திருந்தால், இப்படி செய்திருக்க மாட்டாய்’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது, உண்மையாகக் காதலிப்பவர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், நீ செய்துவிட்டாய். அதனால் என்னை உண்மையாகக் காதலிக்கவில்லை என்று சொல்வதாக பொருள்படும். அது அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் காதலையே கொச்சைப்படுத்துவது போல தோன்றும். எனவே, இதுபோன்ற கடுமையான வார்த்தைகளைக் கண்டிப்பாக உங்கள் பார்ட்னரிடம் உபயோகிக்கக் கூடாது.

5. ‘உன்னை விட என்னுடைய Ex Lover எவ்வளவோ பரவாயில்லை’ என்று சொல்லிடவே சொல்லிடாதீங்க. நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதே நமக்குப் பிடிக்காது. அதிலும் நம்முடைய பார்ட்னர் அவருடைய Ex உடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுகிறார் என்பது உண்மையிலேயே கஷ்டமாக இருக்கும். உங்களுக்கு அவர்களுடன் இருப்பது பிடிக்கவில்லையோ? என்ற வருத்தம் உங்கள் பார்ட்னருக்கு வந்துவிடும். எனவே, கண்டிப்பாக இதுபோன்ற மனதை உடைக்கும் வார்த்தைகளை உங்கள் பார்ட்னரிடம் சொல்லக்கூடாது. இதையெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு அன்பாகப் பேசி பழகினாலே முக்கால்வாசி பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம். முயற்சித்துப் பாருங்களேன்.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT