Happy family 
வீடு / குடும்பம்

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

ம.வசந்தி

குடும்பத்தின் ஆணி வேரே பெண்தான். அந்த வகையில் மகிழ்ச்சியான குடும்பத்துக்கு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. சுறுசுறுப்பாக இருப்பது: பெண்கள் அதிகாலையில் சுறுசுறுப்பாக எழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் தன்னையும் காத்து, தனது குடும்பத்தையும் காத்து, உலகையும் காக்க முடியும். அது மட்டுமல்லாமல், காலையில் மங்கலகரமான சொற்களுடன்புனித நீராடி, வாசல் தெளித்து கோலமிட்டு பூஜையறையில் சென்று வழிபாடு செய்ய, குடும்ப உறுப்பினர்களும் அவரைப் பார்த்து சுறுசுறுப்பாக செயல்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை ஒன்றும் இருக்காது.

2. நல்ல ஆடைகள்: ஆடை சுதந்திரம் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும் சிலர் இரவில் உடுத்தும் ஆடையை பகலில் அணிந்து கொள்வது பெண்களுடைய மதிப்பை குறைக்கும். ஆதலால்  ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாரம்பரிய உடை இருப்பது போல் நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சரியான ஆடைகளை அணியப் பழக வேண்டும்.

3. விளக்கேற்றுதல்: வீட்டில் அன்றாடம் காலையில் நீராடி விட்டு விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. சூரிய உதயத்திற்கு பிறகு மற்றும் சூரியன் மறைவுக்குப் பிறகு ஏற்றப்படும் விளக்குகள் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதைக் காட்டும்.

4. மங்கலகரமான சொற்களைப் பேசுதல்: ஒரு பெண்ணின் சொற்களுக்கும் பேச்சுக்கும் மிகப்பெரிய சக்தி உண்டு என்பதால் எப்போதும் மங்கலகரமான சொற்களை மட்டுமே பேசி, கோபப்படுவதையும் அழுவதையும் தவிர்க்க முயற்சி செய்தாலே குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

5. சிரித்த முகத்துடன் இருப்பது: வீட்டிற்கு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பது, வெளியில் சென்று வரும் கணவன், குழந்தைகள் யாவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்பது இவற்றைச் செய்தாலே அவர்களின் களைப்புகள் அனைத்தும் மறந்து மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்துவார்கள்.

6. சுத்தமாக இருப்பது: சுத்தமான வீட்டை பார்த்தாலே அந்த வீட்டில் உள்ள பெண் சரியாக நடந்து கொள்கிறார் என்பதன் அர்த்தமாகும். அதனால்தான் நாம் ஒருவர் வீட்டிற்குள் நுழையும்போது முதலில் அந்த வீடு எப்படி இருக்கிறது என்பதை மனதில் கணக்கு போட்டு மகிழ்ச்சியை தெரிந்து கொள்கிறோம்.

மேலே குறிப்பிட்ட ஆறு விஷயங்களை கண்டிப்பாகப் பெண்கள் கடைபிடிக்கும்போது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

இருப்பது போதும் என்று நினைத்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!

SCROLL FOR NEXT