வாக்குவாதம் செய்யும் கணவன் மனைவி 
வீடு / குடும்பம்

கணவன் மனைவியிடம் பேசக்கூடாத 7 விஷயங்கள்!

ம.வசந்தி

ருமனம் இணையும் திருமணத்தில் இரு குடும்பங்களின் ஒற்றுமையைத் தாண்டி கணவன், மனைவி இருவரும் கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் உள்ளார்ந்த அர்த்தமாக உள்ளது. அந்த வகையில் கணவன் தனது மனைவியிடம் பேசக்கூடாத ஏழு விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

1. உங்களுடைய மனைவி உங்களை விட எடை கூடுதலாகவோ அல்லது உயரம் சற்று குறைவாகவோ இருந்தால் நிச்சயம் அவர்களுடைய உயரம் மற்றும் உடலின் அமைப்பு குறித்து கேலியாகவும், கிண்டலாகவும் ஒருபோதும் பேசக்கூடாது. அது ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், நாளடைவில் அது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும்.

2. சமையல் என்பது ஒரு கலை. ஆனால், அது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு ஆண் சிறு வயது முதல் தனது தாயின் அரவணைப்பில் அவருடைய கைப்பக்குவத்தில் உணவுகளை உண்டு வளர்ந்திருப்பர். ஆனால், திருமணம் என்று வரும்பொழுது, தனது மனைவியின் கை பக்குவத்திற்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறாக, தனது மனைவி சமைப்பது, தனது தாய் சமைப்பது போல ருசியாக இல்லை என்று கூறுவது அவர்களை மிகப் பெரிய அளவில் சோகத்துக்கு உள்ளாக்கும்.

3. திருமணமான தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதை விரைந்து சரிபடுத்தப் பார்க்க வேண்டும் அல்லது அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். இது இரண்டுமே இல்லாமல், ‘அவர் ரொம்பவும் சத்தம் போடுகிறார்’ என்று பேசுவது, ‘உனக்கு எப்பொழுதும் இதேதான் வேலை’ என்று அவரைக் கடிந்து கொள்ளக் கூடாது.

4. இன்னொரு குடும்பத்திலிருந்து தனது கணவனை மட்டுமே நம்பி அவரது வீட்டுக்கு வரும் ஒரு உயிர்தான் மனைவி. ஆகவே, தனது குடும்பத்தார் முன்னிலையில் அவரை தனது குடும்பத்திற்கு ஏற்றாற்போல உடனடியாக நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கடிந்து கொள்வது மிகப்பெரிய பிளவுகளை கணவன், மனைவி இடையே ஏற்படுத்தும்.

5. உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வரும் மனைவி குறித்தோ அல்லது அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்தோ தவறாக மற்றும் உதாசீனப்படுத்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். அது உங்கள் மேல் உள்ள நல்ல அபிப்பிராயத்தை குறைத்து விடும்.

6. தனது வீட்டில் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு, தனது கணவனை நம்பி வருகின்ற பெண்ணை எப்பொழுதும், ‘நீயும் உனது தாய் போலத்தான் இருக்கிறாய்’ என்று கூறி அவர்களை கோபப்படச் செய்யக் கூடாது என்பதை கணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

7. வேலை முடிந்து நீங்கள் வீட்டுக்குத் திரும்பும்பொழுது. நீங்கள் காலையில் சொல்லிச் சென்ற ஏதோ ஒரு வேலையை உங்கள் மனைவி மறந்திருக்கலாம். அதற்கு காரணம் அவருடைய அதீத வேலைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, ‘காலையிலிருந்து நீ என்னதான் செய்து கொண்டு இருந்தாய்’ என்று கோபமாக அவரிடம் பேசக்கூடாது.

மேற்கூறிய விஷயங்களை கணவர்கள் மனைவியிடம் பேசாமல் தவிர்த்தாலே குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT