இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் பள்ளி, வீடு, பொழுதுபோக்கு, சமூக வலைதளம் என எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஸ்கிரீனின் முன்பாக அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த பதிவில் பெற்றோர்கள் தன் குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தில் எத்தகைய கவனங்களை செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
1. வெளியே செல்வதை ஊக்குவியுங்கள்: இன்றைய கால குழந்தைகள் எப்போது நடைபெற்று டிவி ஸ்மார்ட்போன் வீடியோ கேம் என பெரும்பாலான நேரத்தை எலக்ட்ரானிக் சாதனங்களிலேயே நேரத்தை கழிக்கின்றனர். இது அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கண் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் உண்டாக்குகிறது. எனவே உங்கள் குழந்தைகளை வெளிப்புற இடங்களுக்கு சென்று இயற்கையுடன் நேரத்தை கழிக்க பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
2. ஸ்கிரீன் டைமிங் கட்டுப்படுத்துங்கள்: அதிக நேரம் எலக்ட்ரானிக் தரைகளையே பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தைகளின் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி போன்றவை ஏற்படலாம். எனவே தினசரி எவ்வளவு நேரம் திரை முன்னாடி அவர்கள் நேரத்தை செலவிட வேண்டும் என நிர்ணயம் செய்து பயன்படுத்த விடுங்கள். தொடர்ச்சியாக பார்க்கிறார்கள் என்றால் குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது ஓய்வு எடுக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
3. சரியான வெளிச்சம்: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க அவர்களது அறையில் சரியான வெளிச்சம் முக்கியம். குழந்தைகள் படிக்கும்போது அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும்போது அந்த பகுதி வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்து, அவர்கள் அதிகப்படியான இருளில் எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4. ஆரோக்கியமான உணவு: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்திற்கு சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக விட்டமின் ஏ, சி, இ மற்றும் டி உள்ள உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுங்கள். கேரட், கீரைகள், மீன், முட்டை, சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றில் கண்ணுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
5. வழக்கமான கண் பரிசோதனை: உங்கள் குழந்தைகள் பார்வை குறைபாடு குறித்து எவ்வித புகாரையும் கூறவில்லை என்றாலும், அவர்களுக்கு வழக்கமான கண் பரிசோதனை செய்வது நல்லது. என் மூலமாக தூரப்பார்வை கெட்ட பார்வை போன்ற பார்வை பிரச்சனைகளை கண்டறியலாம். கண் பார்வை குறைபாடுகளால், அவர்களது கல்வி, செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வே பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே அதை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் பெற்றோர்கள் இறங்க வேண்டும்.
6. எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் பற்றி கற்றுக் கொடுங்கள்: மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போது எப்படி பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும்? எப்படி உட்கார வேண்டும்? போன்றவற்றை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். அதிக நேரம், இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் கற்றுக்கொடுங்கள்.
7. பாதுகாப்பு கண்ணாடிகளை பயன்படுத்தவும்: குழந்தைகள் வெளியே சென்று விளையாடும்போது அவர்கள் கண்ணில் காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க அவர்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இப்படி பல விதங்களில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் கண் பராமரிப்பில் பங்களிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கண்கள், மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை பெற்றோராகிய நீங்கள் பரிசாக வழங்க முடியும்.