ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வலம் வர வேண்டும் என்பதைத்தான் தங்களது லட்சியமாகவே கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய 8 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அனைவருக்கும் மரியாதை: அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்கு முதலில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அனுதாபத்தையும், வலுவான மற்றும் முடிவுறா உறவுகளையும் அமைத்துக் கொடுப்பதால், வாழ்வில் நம்பிக்கையும், மற்றவர்களை மதிக்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.
2. கடின உழைப்பு: இன்று நாம் கடின உழைப்பை விட புத்திசாலித்தனமான உழைப்பே சிறந்தது என வலியுறுத்திக் கூறினாலும் கடின உழைப்பிற்கு நிச்சயமான பலன் என்றுமே உண்டு. ஆதலால் குழந்தைகளுக்கு கடின உழைப்போடு கூடிய முயற்சியை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு வளர வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டு சவால்களை எளிதாக எதிர்கொள்வார்கள்.
3. பொறுப்பு: எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதால் நேர்மையான வழியில் குழந்தைகள் நல்ல தேர்வுகளை செய்ய உறுதுணையாக இருக்கும்.
4. பொருளாதார விழிப்புணர்வு: குழந்தைகளுக்கு சேமிப்பு, செலவு மற்றும் பட்ஜெட் போட்டு அதற்குள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் சிக்கனத்தின் அவசியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், பொருளாதார ரீதியாக அறிவார்ந்த முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொடுப்பதோடு தேவைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திவிட்டாலே பொருளாதார ரீதியாக குழந்தைகள் தன்னிறைவு பெற்றுவிடுவார்கள்.
5. சரியான அளவு திரை நேரம்: குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தில் எல்லைகளை வகுத்து, படிக்கக் கற்றுக் கொடுப்பதோடு கிரியேட்டிவிட்டியான பழக்க வழக்கங்களை செய்ய அறிவுறுத்துவதால் வெளியில் சென்று விளையாட வாய்ப்பு ஏற்படும். இதனால் அவர்களின் திரை நேரம் குறைந்து, அவர்களுடைய நேரத்தை சரியான முறையில் செலவிடுவார்கள்.
6. ஆரோக்கியமான எல்லைகள்: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எல்லைகளை வகுப்பதன் மூலம் அவர்கள் சரியான விஷயங்களை தேர்ந்தெடுக்க உதவுகிறது. மேலும், இதனால் குழந்தைகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும்.
7. அன்பும், அனுதாபமும்: குழந்தைகளுக்கு அன்பின் ஆற்றல் என்னவென்பதை செயல்கள் மூலமாக சொல்லிக் கொடுப்பதோடு இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
8. விடாமுயற்சி: ஓரிடத்தில் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் திரும்ப அந்த செயல்களை எப்படிச் செய்வது என்பதை மன உறுதியோடு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வின் சவால்களை திறமையுடனும் உறுதியுடனும் குழந்தைகள் எதிர்கொள்வார்கள்.
மேற்கூறிய 8 விஷயங்களை குழந்தைகளிடம் பழக்கப்படுத்தினால் நிச்சயம் ஒரு நாள் வெற்றியாளராக உங்கள் குழந்தைகள் வலம் வருவார்கள்.