குழந்தைகளுக்கு பல் துலக்க பழக்குதல் https://www.madhimugam.com
வீடு / குடும்பம்

குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்கும் 8 வழிமுறைகள்!

ம.வசந்தி

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பற்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவுகளை மென்று சாப்பிடும்போதுதான் சத்துக்கள் உடலுக்கு விரைவில் கிடைக்கின்றன. குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்கும் 8 வழிமுறைகளைஇந்தப் பதிவில் தெரிந்து கொள்வோமா!

சுத்தம் முக்கியம்: குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் துவங்கியவுடனே அவர்களின் பற்களை துலக்கத் துவங்கிவிட வேண்டும். மிருதுவான துணி அல்லது கைகளால் பற்களை துலக்கக் கற்றுக்கொடுத்து வாயை கொப்பளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்த வேணடும். சிறிது காலத்தில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கி அவர்களின் பற்களை சுத்தம் செய்ய  பழக்க வேண்டும்.

பற்களில் ஒட்டும் உணவு: பற்களில் ஒட்டும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணப் பழக்க வேண்டும். சாக்லேட்கள், மிட்டாய்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதில் கேரட், ஆப்பிள், பீட்ரூட், சின்ன வெங்காயம் என காய்கறிகளை வெட்டிக்கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.

ஆப்பிள்: ஆப்பிள் ஒரு இயற்கை டூத் பிரஷ் ஆகும். சாப்பிடும்போதே பற்களை சுத்தம் செய்யவும் அது உதவுகிறது. மேலும், ஸ்ட்ராபெரிகளும் சாப்பிடும்போதே பற்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால், அவற்றை சாப்பிட வைக்க வேண்டும்.

இனிப்புகள்: குழந்தைகளுக்கு சாக்லேட்கள், மிட்டாய்கள் அல்லது ஏதேனும் ஸ்வீட்கள் கொடுத்தால், அதை அவர்கள் மதிய உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொடுப்பது நல்லது. அது அவர்கள் உணவு சாப்பிடும்போது காணாமல் போய்விடும்.

நீர்ச்சத்து: உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீர்ச்சத்துக்கும் தொடர்பு உண்டு. எனவே, குழ்ந்தைகளின் வாய் மற்றும் பற்கள் நீர்ச்சத்துடன் உள்ளதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.

சாப்பிட்ட பிறகு வாயை கொப்பளிக்க வேண்டியது அவசியம்: குழந்தைகள் எதை சாப்பிட்டாலும், உடனே அவர்களின் வாயை கழுவி விடவேண்டும். குழந்தைகள் உறங்கும்போது, அவர்கள் வாயில் பால் பாட்டிலோ அல்லது தண்ணீர் பாட்டிலோ இருக்கக் கூடாது. இதனால் குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்படும். பற்களின் உள்ளே உணவு துகள்கள் தங்கி அவை பல் சொத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

குழிகளை அடைப்பது: குழந்தைகளுக்கு பற்களில் குழிகள் இருந்தால் அதை அடைப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் அங்கு எந்த உணவும் சென்று சிக்கிக்கொண்டு அவர்களுக்கு பல் சொத்தையை ஏற்படுத்தாது. 

ஃப்ளூரைட்: ஐந்து வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பற்களில் ஃப்ளூரைடை வைப்பதால், அது அவர்களின் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு பல் சொத்தை ஏற்படாமல் காக்கும்.

இத்தகைய நடைமுறைகளைக் கையாளுவதன் மூலம் குழந்தைகள் பற்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT