Are 'nightshades' fruits and vegetables good for the body? Evil? https://ucanr.edu/blogs
வீடு / குடும்பம்

‘நைட் ஷேட்ஸ்’ பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடலுக்கு நன்மையா? தீமையா?

எஸ்.விஜயலட்சுமி

‘நைட் ஷேட்ஸ்’ என்பது சிலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை குறிக்கின்றன. இவற்றில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அதிக நச்சுத்தன்மை கொண்டவை. அவற்றில் பலவற்றை நம்மால் உண்ண முடியாது.

நாம் தினமும் உண்ணும் சிலவகை காய்கறிகள் கூட நைட்ஷேட்ஸ் வகையைச் சேர்ந்தவைதான். இவற்றில் ஆல்கலாய்டுகள் என்கிற ஒரு நச்சுத்தன்மை உள்ளது அவை: உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், மணி மிளகு மற்றும் சில வகை மிளகாய்கள் போன்றவை. இவற்றில் நிறைய நார்ச்சத்தும் மைக்ரோ சத்துக்களும், அதேசமயம் சில தீமைகளும் உள்ளன.

தக்காளி: இதில் நிறைய பொட்டாசியம் சத்து உள்ளது. மேலும், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்து உள்ளது. இதில் உள்ள லைகோபின் என்கிற சத்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. உடலில் உள்ள செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. இதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.

உருளைக்கிழங்கு: இவற்றில் வைட்டமின் சியும் பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இவற்றில் அதிக அளவு நிறைந்து இருக்கும் கார்போஹைட்ரேட் சத்து சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன.

மிளகாய்: இதில் உள்ள கேப்சைசின் என்கிற உட்பொருள் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. நெஞ்செரிச்சல் அறிகுறிகளை போக்க உதவுகிறது. குறைந்த அளவு கலோரி கொண்டதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

கத்தரிக்காய்: இது நல்ல நார்ச்சத்துள்ள ஒரு உணவு. இதன் ஊட்டச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதனுடைய தோலில் உள்ள ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் வெயிலில் சென்று கருக்கும் தேகத்தை பளபளப்பாக்குகிறது. மேலும், இது மன அழுத்தத்திற்கு சிறந்த நிவாரணியாகும்.

மிளகு: உடலுக்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிரம்பிய ஆற்றல் மிக்கவை. கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. மற்றும் சர்க்கரை நோய் தடுப்பு, மூளை செயல்பாடு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.

இவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள்: இவற்றை அளவோடு உண்டால் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கிறது . இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை சீராக வைக்கிறது. உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், இது ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வேறுபடும். சிலருக்கு இந்த மாதிரி காய்கறிகள் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் இவற்றை விலக்கி வைத்தோ அல்லது மிக குறைவாகவோ உண்ணலாம்.

தீமைகள்:

1. நைட்ஷேட்ஸ் காய்கறிகளில் சொல்லப்படும் பொதுவான குற்றச்சாட்டு என்னவென்றால் இவற்றில் காணப்படும் அல்கலாய்ட் மற்றும் கேப்சைஸின் என்கிற பொருள்கள்தான். இவற்றில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் காரணமாக நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன.

2. முகச் சுருக்கம், முகப்பருக்கள், மோசமான குடல் ஆரோக்கியம் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன.

3. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் வீக்கம், படை நோய், கண்கள் அரிப்பு, மூச்சு விடுதலில் சிரமம், மூச்சு திணறல் ஆகியவை உண்டாக்கும். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து பின்பு உண்ணலாம்.

4. இந்தக் காய்கறிகளை அதிகமாக உண்டால் வாந்தி, தலை சுற்றல், மயக்கம் அடிவயிற்றில் தசை சுருண்டு பிடித்தல் போன்றவை வரும். செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். சருமத்தில் அலர்ஜி, தேமல் போன்றவற்றை உண்டாக்கலாம்.

யாரெல்லாம் இந்தக் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்?

சிலருக்கு குடல் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். சரும அலர்ஜி இருப்பவர்கள் உண்ணக்கூடாது. இவற்றை உண்ணும்போது பழங்களாக உண்பதுதான் நல்லது. காயாக உண்ணக்கூடாது. இந்தக் காய்கறிகள் ஒத்துக்கொள்ளாதவர்கள் இவற்றுக்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்றவற்றை உண்ணலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT