Dream 
வீடு / குடும்பம்

கனவில் இத்தனை வகையான கோட்பாடுகள் உள்ளனவா? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!

பாரதி

நமக்கு விதவிதமான கனவுகள் வரும். ஆனால், அந்த கனவுகளில் 7 கோட்பாடுகள் உள்ளன என்பது தெரியுமா?

தூக்கத்தில் திரையில்லாமல் ஓடும் படம்தான் கனவு. சிலருக்கு காலையில் எழுந்தால் கனவுகள் மறந்துவிடும். ஆனால், பலருக்கு சில கனவுகள் எப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்தக் காட்சி அப்படியே நினைவுக்கு வரும். சிலருக்கு நிஜமாகவே நடக்கும். சிலருக்கு முன் ஜென்ம கதைகளெல்லாம் வரும். இதலாம் மனிதர்களால் நம்பப்படுகிறவை. ஆனால், உண்மையா?

கனவு குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்துதான் வருகின்றன. சமீபத்தில்கூட நமது கனவை ரெக்கார்ட் செய்வது போல் ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. கனவுகள் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள், கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில் கனவுகளின் ஏழு கோட்பாடுகள் குறித்துப் பார்ப்போம்.

திறன்களை கற்றுக்கொள்ளுதல்:

கனவுக்குறித்தான பல ஆராய்ச்சிகளில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான். அதாவது ஒருவர் ஒரு சிக்கலுக்கு விடை தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்போது கனவுகள் விடைத் தருகிறதாம். அதாவது அதே சிக்கலுக்கான விடை கனவில் வருமாம். மேலும் புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் இந்த கனவுகள் உதவுகிறதாம்.

மனதை ஒழுங்குப்படுத்துதல்:

அதாவது நாம் விழித்திருக்கும்போது சந்தித்த உணர்வுகளை ஆராய்ச்சி செய்தும், மூளைக்குள் இருந்து சில நரம்பியல் இணைப்புகளை கடத்தியும் நமது மனதை ஒழுங்குப்படுத்துகிறதாம். அதாவது அழைந்து திரியும் மனதை ஒழுங்குப்படுத்துவதில் கனவு பெரிய பங்கு வகிக்கிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

சீரற்ற செயல்பாட்டால் வருபவை:

மேலும் சிலர் இந்த கனவுகளுக்கு எந்த விதமான காரணங்களும், அர்த்தங்களும் கிடையாது. நமது உடல்களின் சீரற்ற செயல்பாடுகளால்தான் இந்த கனவுகள் வருகின்றன என்று சொல்கிறார்கள்.

வேறு உலக கனவுகள்:

இந்த வகையான கனவுகளில் நாம் வேறு உலகத்தில் இருப்பதுபோலத் தோன்றும். அதேபோல், இறந்தவர்களிடம் தொடர்புக்கொள்ளும் விதமாக இந்த கனவுகள் அமையும் என்று சொல்லப்படுகிறது.

தீராத ஆசைகள்:

அதாவது நமது சப் கான்ஸியஸில் இருக்கும் ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை தூங்கும்போது கனவாக வரும் என்றுதான் முக்கால்வாசி ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

குறுகிய நினைவுகளை சேமித்தல்:

அதாவது நம்முடைய குறுகிய நினைவுகளை நீண்டக்கால நினைவுகள் போல் சேமிக்கிறது. பல நினைவுகளை ஒன்றாக்கி காட்சிப் படுத்துகிறது அல்லது புதிய நினைவுகளை உருவாக்குகிறது.

உணர்ச்சி வசப்படும் கனவுகள்:

ஒரு மனிதன் உணர்ச்சிவசப் படுவதைவிட அதிகமாக கனவுகள் உணர்ச்சிவசப்படும் என்று சொல்லப்படுகிறது. நாம் இயல்பு நிலையில் இருக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் செயலாக்கம் பெற்று கனவில் காட்சியாகத் தோன்றும்.

இப்படித்தான் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு கோட்பாடு உள்ளது. உங்களுக்கு வரும் கனவுகளில் ஏதேனும் ஒன்று இந்தக் கோட்பாடுகளில் ஒத்துப்போகும் என்பதில் சந்தேகமேயில்லை.  

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT