Exercise 
வீடு / குடும்பம்

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? அப்படியென்றால் இந்த 7 ரொம்ப முக்கியம்!

பொ.பாலாஜிகணேஷ்

ண், பெண் இருபாலருக்குமே 40 வயது என்பது அவர்களதுஆரோக்கியத்திற்கு சவால் விடும் வயதாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் இந்த வயது முதலே கவனமாக இருந்தால் நம் இறுதி காலம் வரை இன்பமாக வாழலாம்.

1. உடற்பயிற்சி: நம்முடைய உடலின் தசைகள், எலும்புகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உடல் எடை அதிகரித்து நெகிழ்வுத்தன்மை குறைந்துபோகும். இதன் காரணமாக நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.

2. உடலை பலப்படுத்தும் பயிற்சிகள்: வயதாவதால் ஏற்படக்கூடிய தடையிழப்பை சரி செய்ய வொர்க்கவுட் மிகவும் அவசியமாகும். உடலை வலுப்படுத்தும் பயிற்சி இல்லையென்றால், உடலின் சமநிலை தவறி கீழே விழக்கூடிய ஆபத்து அதிகரிக்கும்.

3. போதுமான தூக்கம்: உடலை மீட்டெடுக்கவும், அறிவாற்றலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியமாகும். போதுமான தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் அதிகமாவதோடு உடல் எடையும் அதிகரிக்கும். தினமும் இரவு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் நன்றாக தூங்குங்கள்.

4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை, ஹைபர் டென்ஷன் அதிகரிப்பதோடு மற்ற உடல் நலப் பிரச்னைகளையும் வரவழைக்கும். முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த டயட்டை பின்பற்றுங்கள். பழங்கள், காய்கறிகள், லீன் புரொட்டீன், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஆற்றல் அளவையும் மேம்படுத்த முடியும்.

5. மனநல ஆரோக்கியம்: உடற்பயிற்சி போலவே மனநல ஆரோக்கியமும் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் அதிகரித்தால் வயதாகும்போது பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.

6. உடல் பரிசோதனை: வயது அதிகரிக்க அதிகரிக்க, அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிய முடியாமல் போகும்.

7. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை: செரிமானம், இரத்த ஓட்டம், உடல் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல செயல்பாடுகளுக்கு நீர்ச்சத்து அவசியமாகும். ஆகவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT