Buying a new car 
வீடு / குடும்பம்

புதிய கார் வாங்க காத்திருப்பவர்களா நீங்கள்... அப்போ இதுதான் உங்களுடைய கார்!

A.N.ராகுல்

கார் வாங்கும் பரபரப்பான உலகத்திற்குள் நுழைவோம். சரியான காரைத் தேர்ந்தெடுப்பது ஒரு பகட்டுக்காக மட்டுமல்ல; இது உங்கள் வாழ்க்கை முறை சார்ந்தது, விருப்பத் தேர்வுகள் மற்றும் நடைமுறைத் தேவைகளுடன் ஒத்துப்போகும் ஒரு கண்டுபிடிப்பு போன்றது. இப்படி ஒரு கார் தேர்வில் ஒளிந்திருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வோம்:

1. செடான்ஸ் (Sedans):

குழந்தையை ஒரு காரை வரையச் சொல்லுங்கள், 95% நேரம் அது செடானாக இருக்கும். இந்த வகை கார்களில் பின்புறத்தில் நீண்ட தோற்றமும்(trunk) முன்புறத்தில் ஒரு என்ஜினுடன் சம அளவில் இருக்கும். செடான் காம்பாக்ட் முதல் முழு நிலை செடான் வரை பல்வேறு அளவுகளில் வருகின்றன. தினசரி பயணங்களுக்கும், குடும்பப் பயணங்களுக்கும், ஹை வே பயணங்களுக்கும் ஏற்றவை. உங்களுக்கு சொகுசுடன், சோர்வில்லாத பயணத்தையும் நேர்த்தியான தோற்றத்தையும் மதிக்கிறீர்கள் என்றால், ஒரு செடான் உங்கள் விருப்பமாக இருக்கலாம்.

2. ஹேட்ச்பேக்குகள் (Hatchback):

ஹேட்ச்பேக்குகள் , செடானின் பாதி தன்மையுடன் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுருங்கிய நிலையில் இருக்கும் கார். இவை எரிபொருள் திறன் கொண்டவை. அன்றாடம் நகரத்தில் அதிக பயணம் செய்வோருக்கும் குறுகிய இடங்களில் சிரமமின்றி பார்க் செய்வதற்கும் இந்த வகை கார்கள் ஏற்றவை.

3. எஸ்யூவிகள் (Sport Utility Vehicles):

SUV கார் உலகின் அரசன் போன்றது. இவை கரடுமுரடான நிலப்பரப்புகளில்கூட உங்கள் குடும்பத்தை எந்த ஒரு அசௌகரியம் இன்றி சுமந்துசெல்லும் திறன் படைத்தவை. எந்த ஒரு பள்ளத்திலும் அச்சமின்றி உங்களால் இறக்கி ஏத்த முடியும். நம் வாகன சந்தையில் இந்த வகை SUVகள் வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. சிறிய, நடுத்தர மற்றும் முழு அளவு( Sub Compact, Mid Size, Full sized SUV) என்று சந்தைப்படுத்தப்படும் இவ்வகை

கார்களில் உள்ள சிறப்பம்சமே பெரிய லெக் ரூமுடன்(Leg room), அதிக இடவசதியுடன் நிறைய நபர்களுடன் பயணிக்க முடியும் என்பதே!

4. கன்வெர்டிபிள் (Convertibles):

கடலோர நெடுஞ்சாலையில் இயற்கை காற்றுடன் இணைந்து பயணிக்க விரும்புவோருக்குக்கான தேர்வுதான் இது. இந்த வகை கார்களில் அதன் கூரைகளை(Roofs) தேவைப்படும்போது நம்மால் கழட்டிக்கொள்ள முடியும், இதன் மூலம் பகலிலோ அல்லது இரவில் நட்சத்திரத்தையோ உங்களால் திறந்த வெளியில் வாகனத்தை இயங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பல பேருடன் நின்றுகொண்டு ரசிக்க முடியும். இப்படிப்பட்ட சாகசம் நிறைந்த மகிழ்வான பயணத்தை விரும்புவோருக்கு இந்த வகை கார்கள் சிறந்த தேர்வு.

புதிய கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

பட்ஜெட்:

நீங்கள் எவ்வளவு செலவழிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். காப்பீடு, வரிகள் மற்றும் தற்போதைய பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

பயன்பாடு:

தினசரி பயணம், நீண்ட பயணங்கள் அல்லது இரண்டிற்கும் காரை பயன்படுத்த போகிறீர்களா? என்று தீர்மானியுங்கள்.

எரிபொருள் திறன்:

எரிபொருள் செலவுகளை மதிப்பிடுவதற்கு (Mileage) நீங்கள் சராசரியாக எவ்வளவு மைல்கள் பயணிக்கக்கூடும் என்பதைக் கணக்கிடுங்கள்.

மறு விற்பனை மதிப்பு (Resale Value):

சில வகை கார்கள் அவற்றின் மதிப்பை மற்ற பிராண்ட் கார்களைவிட சிறப்பாக வைத்திருக்கின்றன. எனவே அதற்கேற்றவாறு உங்கள் தேர்வை வைத்துக்கொள்ளுங்கள்.

லக்கஜ் ஸ்பேஸ் (Luggage):

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பயணத்திற்கான அவசியம், லக்கஜ்(Luggage) தேவையின் இடத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் அதில் உள்ள சிறப்பான அம்சங்களை ஆராய்ச்சி செய்யுங்கள்.

பார்க்கிங்:

உங்கள் பார்க்கிங் சூழ்நிலையைக் முதலில் கவனியுங்கள் காரணம் இறுக்கமான இடங்களில் சிறிய கார்கள்தான் சுலபமாக நிறுத்த முடியும்.

அதற்கேற்றவாறு தேர்வு செய்வது உங்கள் அன்றாட உபயோகத்திற்கு நல்லது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT