Pregnant women 
வீடு / குடும்பம்

கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த விஷயங்களை சொல்லாதீர்கள்!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்றெல்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் எந்த விஷயங்களுக்கு வருத்தப்படுவார்கள் என்பதை பற்றி அறிந்ததுண்டா? எந்த விஷயங்கள் கர்ப்பிணி பெண்களை வேதனைப்படுத்தும் என்பதை தெரிந்துக் கொண்டு பேசுவது அவசியம். முக்கியமாக கணவர்கள் தங்களின் மனைவியின் கர்ப்பகாலத்தில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பதிவு அவர்களிடம் எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை விளக்குவதால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

உடல்

  • கர்ப்பிணிப் பெண்களிடம் நீங்கள் குண்டாக இருக்கிருறீர்கள் என சொல்லக்கூடாது. அத்துடன் அவர்களின் முகம் மற்றும் நிறத்தை பற்றியும் மனம் வருந்தும்படி கூறக்கூடாது. மாறாக, அவர்களை  எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உங்கள் அன்பால் நினைவூட்டுங்கள். கணவன்மார்களே!

உணர்ச்சி

  • 'நீ எப்படி உணர்கிகிறாய் என்பது எனக்குத் தெரியும்' என்று கூறுவதை அவ்வளவாக கர்ப்பிணிப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பானவர்கள்.

ஆறுதல்

  • கர்பமான மனைவியிடம் 'ஏன் அழுகிறாய்? என்று கேட்பதற்குப் பதிலாக, அவளை அன்பால் ஆறுதல்படுத்தி, 'இந்த சவாலான கட்டத்தின் முடிவில், நீ வெற்றி பெறுவாய்' என்று அடிக்கடி சொல்லி தைரியப்படுத்துங்கள்.

பயம்

  • அதேபோல், பிரசவ நாளை அவர்களிடம் நினைவூட்ட வேண்டாம். கர்ப்பம் என்பது ஒரு குறுகிய கால நிகழ்வு அல்ல என்பது அறியப்பட்ட உண்மை. அவர்கள் அதை நினைத்து பயந்தாலும், நீங்கள் ஆறுதலாக ஊக்கப்படுத்தலாம்.

பசி

  • கர்பிணிப் பெண்களுக்கு சில நாட்களில் அதிகமாக பசி எடுக்கலாம்.  மற்ற நாட்களில், பசியே இல்லாமலும் இருக்கலாம். அந்த நாட்களில், அவர்களின் போக்கிலே விட்டு விட வேண்டும். அவர்களின் உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை அன்பாக சொல்லுங்கள். 

ஆடை

  • கர்ப்பிணிப் பெண்களிடம் நீ இந்த ஆடையை தான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். அது அவர்களுடைய விருப்பம். அவர்களுக்கு எந்த ஆடை ஏற்றதோ அதை அவர்களே தேர்ந்தெடுத்து அணிவது நன்று. 

குழந்தை

  • கர்ப்பமான பெண்களிடம் குழந்தையின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசாமல், அவர்கள் மீதும் அக்கறையை காட்ட வேண்டும்.

கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோனில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதால், சில நேரங்களில் உங்களுடைய வார்த்தைக்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். சில நேரங்களில் நீங்கள் பேசும் வார்த்தைகள் அவர்களை கோபப்படுத்தலாம். அதனால், அவர்களை காயப்படுத்தும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் சின்ன விஷயம் என்று நினைப்பது கூட அவர்களை பெரிய அளவில் காயப்படுத்தலாம்.

'தன் உயிரை பணயம் வைத்து இன்னொரு உயிரை இந்த உலகிற்கு கொடுப்பவள் அவள். அவளை பார்த்துக் கொள்வது வீட்டில் உள்ள அனைவரின் கடமை. கணவனின் தலையாய கடமை.' 

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT