Romantic bedroom ideas Image Credits: DGEXP Home
வீடு / குடும்பம்

உங்கள் பெட்ரூமை ரொமேன்டிக்காக மாற்ற இதையெல்லாம் செய்யலாமே!

நான்சி மலர்

நாம் இருக்கும் இடத்தை அமைதியான சூழலுடன் வைத்துக்கொண்டாலே போதும், வீட்டில் எந்தப் பிரச்னையும் வராது. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடுவதற்கு பெட்ரூமில் சில மாற்றங்கள் செய்தாலே சண்டை, சச்சரவு இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

முதலில் ஒரு இதய வடிவத்தில் Photo wall ஒன்றை படுக்கையின் பின்னால் இருக்கும் சுவரிலோ அல்லது வேறு காலியாக இருக்கும் சுவற்றிலோ அமையுங்கள். அதில் நீங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அது நீங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைவுப்படுத்தும். எனவே, சண்டை வரும் போதெல்லாம் இதைப் பார்க்கும்போது சமாதானம் ஆகிவிடுவீர்கள்.

மெல்லிய இசை படுக்கையறையில் ஒலிப்பதற்கேற்ப ஸ்பீக்கரை படுக்கையறையில் பொருத்த வேண்டும். அதில் இருவருக்கும் பிடித்தமான பாடல்களை கேட்கும்போது ஒரு நல்ல மனநிலையை இருவருக்குமே உருவாகும்.

படுக்கையறையில் Warm lights பயன்படுத்துவது சிறந்தது. Warm light என்பது 3300°K வெப்பநிலைக்கு குறைந்ததாக சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் போன்ற நிறங்களில் வரும். எனவே Dim Lights பயன்படுத்துவது அந்த அறையை ரொமேன்டிக்காக மாற்றிவிடும்.

Scented candles பயன்படுத்துவது நல்ல வாசனையை அறை முழுவதும் பரப்பும். நல்ல வாசனையை நுகரும்போது அது நல்ல மனநிலையை உருவாக்கும். ஜேஸ்மின், லேவென்டர், ரோஸ் போன்ற வாசனைகளை பயன்படுத்துவது சிறந்தது.

படுக்கையறைக்குப் பயன்படுத்தும்  நிறம் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். முடிந்த அளவிற்கு Soft colour or muted colours பயன்படுத்தவும். Black, grey, brown, white ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

Canopy bed என்பது படுக்கையை சுற்றி Curtains போன்று அமைக்கப்படுவதாகும். இது பார்ப்பதற்கு அழகாகவும், ரொமேன்டிக்காகவும், ஆடம்பரத்தையும் கொடுக்கும்.

படுக்கையறையில் இருக்கும் ஜன்னலுக்கு Blackout curtains பயன்படுத்துவது சிறந்தது. இது ஒளி மற்றும் ஒலியை அறவே தடுப்பதால் அது படுக்கையறைக்கு Privacy ஐ உருவாக்கும். எந்த தொந்தரவும் இன்றி நிம்மதியாக இருக்க உதவும். இதையெல்லாம் செய்து பாருங்கள். உங்க வாழ்க்கை பார்ட்னருடன் சண்டையே வராது. அப்படியே வந்தாலும் சுலபமாக சமாளித்துவிடலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT