https://www.inc.com
வீடு / குடும்பம்

நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் தேவையில்லாத 10 பழக்கங்கள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு நாளும் அந்த நாள் நன்றாக அமைய வேண்டுமே என்கிற ஆசையோடும் நம்பிக்கையோடும்தான் அந்த நாளை எதிர்கொள்ளத் தொடங்குகிறோம். ஆனால், இடையில் ஏதாவது நிகழ்ந்து நமது மனநிலையை மாற்றி சந்தோஷத்தை பறித்து விடுகிறது. சந்தோஷமாகவும் திருப்தியடனும் வாழ விரும்பினால் இந்த பத்து பழக்க வழக்கங்களை கண்டறிந்து அவற்றை தவிர்த்து விடுங்கள்.

1. அதீத சிந்தனை: நம்மிடமிருந்து மகிழ்ச்சியை பறிக்கும் விஷயங்களில் முதலிடத்தில் பிடிப்பது ஓவர் திங்கிங் எனப்படும் அதீத சிந்தனை. இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது? அப்படி நடந்து விட்டால் என்ன செய்வது? என்று தேவையில்லாமல் அதீதமாக யோசித்து மனதைக் குழப்பிக்கொள்வதில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்.

2. சிறிய விஷயங்களை பெரிதுபடுத்துவது: ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களை பெரிதுபடுத்திப் பார்த்து மகிழ்ச்சியை தொலைப்பவர்கள் பலர். 'இந்த உடை நல்லாவே இல்லை' என்று யாராவது சொல்லிவிட்டால் அன்று முழுவதும் மூட் அவுட்டாகி உட்கார்ந்து கொண்டு இருப்பதெல்லாம் தேவை இல்லை. அந்த கமெண்ட்டைக் கண்டுகொள்ளாமல் போவதுதான் புத்திசாலித்தனம்.

3. வெறுப்பை சுமந்து கொண்டிருப்பது: கடந்த காலத்தில் நமக்கு தீங்கிழைத்தவர்களை நினைத்துக் கொண்டு அவர் மேல் வெறுப்பையும் சுமந்து கொண்டு நிகழ்காலத்தை பாழாக்குவார்கள் சிலர். நண்பரோ அல்லது உறவினரோ கடந்த காலத்தில் உங்களிடம் சண்டையிட்டு இருக்கலாம். அதையெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்காமல் அவர்களை மன்னித்து மறந்து விடுவது புத்திசாலித்தனம்.

4. வேலையை தள்ளிப்போடுதல்: இந்த குணம் எப்போதுமே நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்காது. வேலைகளை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து மொத்தமாக அவற்றை செய்யும்போது மன அழுத்தமும் மகிழ்ச்சியின்மையும் வந்து சேரும். சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பது நன்று.

5. பிறருடன் ஒப்பிடுவது: எப்போதும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது சுய வளர்ச்சியை தடுக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் நினைத்தால் மட்டுமே முன்னேற முடியும். நிம்மதியாகவும் இருக்க முடியும்.

6. நல்ல பழக்க வழக்கங்களை உடனே கைவிட்டு விடுதல்: முக்கியமான, ஆரோக்கியமான நல்ல பழக்க வழக்கங்களை சிறிது சிரமம் எடுத்து செய்ய வேண்டும் என்பதற்காக அதை கைவிட்டு விடுதல் நல்லது அல்ல. உடற்பயிற்சி செய்வது அல்லது பொழுதுபோக்குகனை குறைத்துக் கொள்ளுதல் என்று சில நாட்கள் மட்டும் முயன்று விட்டு பின்பு அவற்றை கைவிடுதல் நம்மை மகிழ்ச்சியிடமிருந்து விலகி வைத்து விடும்.

7. திருப்தியின்மை: நாம் செய்யும் வேலைகளில் உடனடி முன்னேற்றம் கிடைக்காவிட்டால் உடனே மனது தளர்ந்து போய் விடுவதும், உடனே திருப்தி இல்லாமல் அந்த வேலையை சரிவர செய்யாமல் இருப்பதும் நமது சந்தோஷத்தை தொலைத்து விடும்.

8. நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பது: ஒருவர் தினமும் சரியான அளவு தூங்கி எழுந்தால் மட்டுமே அடுத்த நாளைக்கான ஆற்றலும் சக்தியும் கிடைத்து தன் வேலைகளை சரியாக செய்ய முடியும். நமது மூளை நன்றாக ரிலாக்ஸ் ஆகி உற்சாகமாக நம்மை வைக்கும்.

9. நன்றி உணர்வு இல்லாமல் இருப்பது: நமக்கு உதவி செய்த மனிதர்கள், இயற்கை, கடவுள் என எல்லாவற்றின் மேலும் நன்றியுடன் இருக்க வேண்டும். அந்த உணர்வு இல்லை என்றால் அவர்களால் எப்போதும் சந்தோஷமாக இருக்கவே முடியாது

10. எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருப்பது: எப்போதும் இந்த உலகத்தைப் பற்றி எதிர்மறை கருத்துக்களை வைத்துக்கொண்டு இருந்தால் ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்த முடியாது. எனவே, மற்றவர்கள் மேல் நேர்மையான எண்ணங்கள் வைப்பது நல்லது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT