Do you know the benefits of daydreaming? https://dheivegam.com
வீடு / குடும்பம்

பகல் கனவு காண்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

ஆர்.ஐஸ்வர்யா

டப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள். ஆனால், பகல் கனவு காண்பது ஒருவரின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும் என்று நரம்பியல் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

பகல் கனவு காணும் விதம்: பகல் கனவின்போது மனித மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் கனவு காண்பது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. எப்போதும் பதற்றமாகவும் அவசரமாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகியல் வாழ்வில் பகல் கனவு மிகவும் உதவியாக இருக்கிறது. கவலை அல்லது சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை சந்திக்கும்போதும் மன அழுத்தத்தில் இருக்கும்போதும் பகல் கனவு காணத் தொடங்கலாம்.

அதற்கான வழிமுறைகள்: செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு தனியான ஒரு இடத்தில் அமரவும் அல்லது படுக்கையில் படுக்கவும். மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட வேண்டும் அல்லது சைலண்ட் மோடில் போட வேண்டும். யாரும் உங்களை தொந்தரவு செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடலைத் தளர்வாக வைத்துக்கொண்டு, மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். பிறகு மூச்சை வெளியே விட வேண்டும். இதுபோல சில முறைகள் செய்யவும். அடுத்து உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கவும். அதை காட்சிகளாக கற்பனையில் பார்க்கவும்.

உதாரணமாக, ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மேற்கண்ட முறையைப் பயன்படுத்தி, அவர் கனவு காணும்போது முன்பு வியாபாரத்தில் மிகுந்த லாபம் அடைந்த அந்த கணங்களை மனதிற்குள் கொண்டு வந்து அதை படமாக ஓட விட வேண்டும். அப்பொழுது மனது மகிழ்ச்சியாகிறது. மனதில் அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அடிக்கடி இது போலச் செய்ய வேண்டும்.

ஞாபக சக்தி அதிகரித்தல்: மேற்கண்ட முறையில் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்டு சிறிது நேரம் எதுவும் நினைக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள் என்றால் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெறுவது போல கற்பனை செய்து கொண்டு அந்த நிலையிலேயே சில நேரம் நீடித்திருக்க வேண்டும். தினமும் இதுபோல செய்து வந்தால் தேர்வை பற்றிய பயம் விலகி, படித்த பாடங்கள் நன்றாக நினைவில் இருக்கும்.

படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது: எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்களுக்கு படைப்பாற்றலை நன்றாக ஊக்குவிக்கிறது. பகல் கனவு காணும்போது தாங்கள் எழுத நினைக்கும் கதைகளுக்கு ஏற்ற விஷயங்களை அது தருகிறது. பகல் கனவு காணும் நேரத்தில் மனது ஓய்வில் இருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். அப்போது கற்பனையாக நினைக்கும் விஷயங்கள் மனதில் படம் போல ஓடத் தொடங்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட தன்னுடைய ரிலேடிவிடி தியரியை பகல் கனவின்போதுதான் கண்டுபிடித்தார் என்று சொல்வார்கள்.

சிக்கல்களை தீர்க்கிறது: தீர்க்கவே முடியாத பிரச்னைகள் என்று சில இருக்கும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பகல் கனவு காணும்போது அந்த பிரச்னைக்கான தீர்வுகளை, கற்பனையாக (அது நடக்குமா நடக்காதா என்ற சந்தேகங்கள் இன்றி) நினைத்துப் பார்க்க வேண்டும்.

நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இதேபோல பகல் கனவு காண சிறிது நேரம் ஒதுக்கித் தந்தால், அவர்கள் மிக நன்றாக வேலை செய்வார்கள். தங்கள் உடலை தளர்த்திக்கொண்டு கண்களை மூடி, மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் ஆகும்போது, அவர்களின் மனது அமைதியடையத் தொடங்கும். இது தங்களது பணியில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க அவர்களுக்கு வழி தேடித் தருகிறது. சுறுசுறுப்பாக இயங்கவும் முடிகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT