green flag personality Img Credit: sosyncd
வீடு / குடும்பம்

எல்லோரும் விரும்பும் கிரீன் ஃபிளாக் நபர்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

னிதர்களை அவர்களின் குணங்களை, பண்புகளை வைத்து அவர்களை ரெட் ஃபிளாக் நபர்கள், எல்லோ ஃபிளாக், கிரீன் ஃபிளாக் ஆசாமிகள் என்று பிரிக்கலாம். இந்தப் பதிவில் கிரீன் ஃபிளாக் நபர்களின் சிறப்பைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கிரீன் ஃபிளாக் நபர்களின் சிறப்பியல்புகள்: கிரீன் ஃபிளாக் நபர்கள் ரெட் ஃபிளாக் நபர்களுக்கு நேர்மறையாக இருப்பார்கள். இவர்கள் உறவுகள் மற்றும் நட்பில் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான நடத்தையை கடைபிடிப்பார்கள்.

1. மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாக இருத்தல்: ஒரு மனிதன் தங்கள் செயல்களுக்கு மற்றும் தவறுகளுக்கு வேறு யாரையும் குறை சொல்லாமல் இருப்பது அவர் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, நல்லவிதமாக பக்குவமாக கிரீன் ஃபிளாக் நபர்கள் நடந்து கொள்வார்கள்.

2. தன்னம்பிக்கை: மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவர்கள். தன்னை மனதார நேசிப்பார்கள். அதேபோல பிறரையும் நேசிப்பார்கள். பிறரை எப்போதும் கட்டுப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள். தனித்துவத்தில் சிறந்து விளங்குவார்கள். தன்னைப் போலவே பிறரையும் நம்பும் குணமுடையவர்கள்.

3. திறமையான தகவல் தொடர்பு: பச்சைக் கொடி இயல்பு கொண்ட நபர்கள் திறமையான தொடர்பாளர்கள். அவர்கள் தங்களைத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள், சுறுசுறுப்பாகக் கேட்கிறார்கள். எந்தவித முன் முடிவுகளும் இன்றி பிறரின் உணர்வுகள் மற்றும் கவலைகளைப் பற்றி திறந்த மனதுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

4. நம்பகத் தன்மை: இந்த நபர்கள் நம்பகமானவர்கள். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறார்கள், ரகசியத்தன்மையைப் பேணுகிறார்கள், தங்கள் செயல்களில் நிலையானவர்களாக இருக்கிறார்கள்.

5. பச்சாதாபம் காட்டுதல்: பிறரது பிரச்னையை, சிக்கலை தீர்க்க முடியாவிட்டாலும் கூட, அவர்களது கஷ்டத்தை புரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். கிரீன் ஃபிளாக் ஆசாமிகள் பிறருடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு அவர்கள் மேல் பச்சாதாபத்தை வெளிப்படுத்துவார்கள்.

6. ஆறுதல் தருதல்: வாழ்க்கைத் துணை, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களிடம் மிகுந்த அக்கறையுடன், அன்புடன், ஆதரவுடன் பழகுவார்கள். அவர்களது பிரச்னைகளை புரிந்துகொண்டு ஆறுதல் தருவார்கள். அதனால் அவர்களது மன அழுத்தம் குறையும்.

7. உறவில் சமத்துவம்: தனது கணவன் அல்லது மனைவியை சமமாக பாவிக்கும் இயல்புடையவர்கள். தனது துணையின் கருத்தை மதித்து மரியாதை செலுத்துவார்கள். தனது துணையை குறைகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு இவர்கள் உடன்படுவார்கள் என்று அர்த்தம் அல்ல. உடன்படாதபோது கூட அவர்களை சரியாக புரிந்துகொண்டு, அன்பு செலுத்துவார்கள்.

8. கோபக்கட்டுப்பாடு: கிரீன் ஃபிளாக் ஆசாமிகள் கோப மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். ரெட் ஃபிளாக் ஆசாமிகளைப் போல அவமானப்படுத்துவது, ஆக்ரோஷமாக சண்டை போடுவது என்று இல்லாமல் தனது துணை மற்றும் நண்பர்கள், கூட்டாளிகளை மதித்து அவர்கள் மனம் வருந்தாதவாறு அவர்களை அமைதிப்படுத்துவார்கள். கோபத்தை பக்குவமாகக் கையாளுவார்கள். தன்னுடைய கருத்தை பிறர் மேல் திணிக்கவே மாட்டார்கள்.

9. வேடிக்கை மற்றும் விளையாட்டுத்தனமாக இருப்பது: மன அழுத்தம் தரக்கூடிய வாழ்க்கை சில சமயங்களில் கடினமாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் இருக்கும். வேடிக்கை மற்றும் விளையாட்டுத்தனமான இவர்களது குணம் இவற்றை இலகுவாக எதிர்கொள்ள உதவும். இந்த குணம் கிரீன் ஃபிளாக் ஆசாமிகளுக்கு உண்டு. தனது நண்பர்களையோ, நெருங்கிய உறவினர்களையோ, மனைவியையோ, கணவனையோ ஒரு குழந்தையாக பாவித்து அவர்களை அப்படி நடத்தும்போது இரு பக்கத்திலும் மன அழுத்தம் இல்லாமல் இந்த உறவை நன்றாக நீட்டிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டு இவர்கள் பெரும்பாலான சமயங்களில் நடந்து கொள்வார்கள்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT