Do you know the difference between Wallet and Purse? https://www.rvvleather.com
வீடு / குடும்பம்

Wallet - Purse இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

வாலெட், பர்ஸ் இந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். பணம் வைக்கும்போது பலர், ‘வாலெட்’ என்றும் பலர் ‘பர்ஸ்’ என்றும் கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

அன்றாட தேவைகளுக்கு நாம் அனைவரும் பர்ஸோ அல்லது வாலெட்டோ பயன்படுத்துகிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டுமே பணம் வைப்பதுதானே என்கிறீர்களா? வாலெட் சிறிய வடிவில் இருப்பதால் அதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் பணம் மட்டுமே வைத்திருக்க முடியும். அதிக அளவிலான ஆவணமோ தேவையான பொருட்களையோ வாலெட்டில் வைக்க முடியாது. ஏனென்றால், அது உங்கள் பாக்கெட் அளவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், பர்ஸ் அப்படி இல்லை. கையில் எடுத்துச் செல்லப்படும் இந்த பர்ஸ் மிகவும் நீளமானதாக இருக்கும். வாலெட்டுடன் ஒப்பிடும்போது இது சிலருக்கு சௌகரியமாக இருக்கும். இதில் பணம் கார்டுகளைத் தாண்டி வேறு ஏதேனும் கொண்டு செல்ல முடியும். பல அத்தியாவசிய பொருட்களை வைக்க முடியும். ஆண்கள் பலரும் வாலெட்டும், பெண்கள் பர்ஸும் உபயோகிப்பார்கள் என்றே கருதுகின்றனர். ஆனால், இது பாலினம் சம்பந்தப்பட்டது அல்ல. பொருட்கள் சம்பந்தப்பட்டதாகும்.

பெரும்பாலும், குடும்பப் பெண்கள் வீட்டு சாவி, போன் என அனைத்தையும் பர்ஸுக்குள்ளே அடக்கி விடுவார்கள். ஆனால், வாலெட்டில் இதுபோன்ற வசதிகள் இருக்கிறது. எனவே, பர்ஸும் வாலெட்டும் ஒன்றல்ல என்பது உண்மையாகும். தற்போதைய ட்ரெண்டிங்கில் பர்ஸும் ஒரு படி மேலே சென்று ஸ்லிம் பேக்காகவும் பெரிய அளவிலான பேக்காவும் மாறி உள்ளது. இதையும் பெண்கள் பர்ஸாகவே பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஜிப்புகளை கொண்ட இந்த பேக்குகள் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

வாலெட்டாக இருந்தாலும் சரி, பர்ஸாக இருந்தாலும் சரி அதை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நன்றாக துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் பார்க்கவே அழகாக இருப்பதோடு, பலவித மாடல்களில் கிடைக்கிறது. ஆண்களுக்கு வாலெட் மிகவும் உபயோகமானதாக உள்ளது. அதுவும் பல கலர்களில் கிடைக்கிறது. எதையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பக்குவமாகவும் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். குறைவான விலையாக இருந்தாலும் நமக்கு அது வசதியான வகையில் அதில் பிரிவுகள் இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும்.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT