Love brain Syndrome https://hms.harvard.edu
வீடு / குடும்பம்

காதல் மூளை சிண்ட்ரோம் உண்டாக்கும் நரம்பியல், உளவியல் விளைவுகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

வ் ப்ரெய்ன் சிண்ட்ரோம் (Love brain Syndrome) என்பது முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அல்லது உளவியல் நிலை அல்ல. ஆனால், இது காதலுடன் தொடர்புடைய தீவிரமான உணர்வை குறிக்கிறது. காதல் உணர்வு மூளை, உணர்ச்சிகள் எண்ணங்கள் மற்றும் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நரம்பியல் வேதியியல் மாற்றங்கள்: ஒரு நபர் காதலிக்கும்போது மூளையில் பல நரம்பியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

டோபமைன்: நல்ல உணர்வு நரம்பியக்கடத்தி என்று அழைக்கப்படும் டோபமைன் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இது ஒருவிதமான பரவச உணர்வையும் அதிகரித்த ஆற்றலையும் தருகிறது. மேலும். அன்புக்குரியவர் மீது அதிக கவனம் செலுத்தவும் வைக்கிறது.

ஆக்ஸிடாஸின்: ஆக்ஸிடாஸின் என்பது பெரும்பாலும் காதல் ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது. இது நெருக்கம் மற்றும் நம்பிக்கையின் உணர்வுகளை ஊக்குவிக்கிறது.

செரோடோனின்: மனதில் உற்சாகத்தைத் தூண்டும் ரசாயனம் சென்ரோடோனின். ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் காதலிக்கும் ஆரம்பக் கட்டங்களில் செரோடோனின் அளவு குறையும். ஏனென்றால், இது அன்பானவரைப் பற்றிய வெறித்தனமான சிந்தனையில் இருப்பதால் உற்சாகம் குறையும் என்று கருதப்படுகிறது.

மூளையின் செயல்பாடு: ஒரு நபர் தனது காதல் துணையைப் பற்றி சிந்திக்கும்போது மூளையில் ஏற்படும் செயல்பாடுகள் எப்படி பாதிக்கின்றன தெரியுமா? மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். எப்போதும் மகிழ்ச்சிகரமான உணர்வுகளை உற்பத்தி செய்யும். தனது பிரியத்திற்கு உரியவருடன் இருக்கும்போது அது ஒருவிதமான எதிர்பார்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மூளையின் ஒரு பகுதி ஒருவரைப் பற்றிய அனுமானம் மற்றும் முடிவெடுக்கும் தன்மையை தீர்மானிக்கும். ஆனால், காதலிக்கும்போது இந்தத் திறன் குறைந்துவிடும். மேலும், காதலிக்கும் நபரின் குறைகளை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்த வைக்கும்.

உளவியல் விளைவுகள்:

வெறித்தனமான எண்ணங்கள்: செரோடோனின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தனிநபர்கள் தங்கள் துணையைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பார்கள். அதனால் செய்யும் பணியில் சில சமயங்களில் கவனச்சிதறல் ஏற்படும். அலுவலகம் அல்லது தொழிலில் தவறுகள் நேர்ந்து நஷ்டத்தை கொண்டு வரலாம்.

உணர்ச்சி சார்பு: காதல் உணர்வுகளைத் தூண்டும் ஆக்ஸிடாஸின் மற்றும் வாசோபிரசின் அதிகரிப்பு காரணமாக நேசிப்பவர் மீது அன்பு அதிகரித்து வலுவான உணர்ச்சி சார்பு உண்டாகும். அதாவது. நேசிப்பவரின் அருகிலேயே அடிக்கடி இருக்க மனம் விரும்பும்.

ரிஸ்க் எடுக்கும் குணம்: தீவிர உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலர்கள் சாதாரணமான தனது இயல்பான குணம் மாறி, ரிஸ்க் எடுத்து எந்த எல்லைக்கும் செல்லும் அசட்டுத்தனமான துணிச்சலைப் பெறுகிறார்கள். விளைவுகளைப் பற்றி அக்கறையோ. கவலையோ கொள்வதில்லை.

நடத்தை மாற்றங்கள்:

முன்னுரிமை: காதலில் உள்ளவர்கள் பெரும்பாலும் மற்ற உறவுகள் மற்றும் பொறுப்புகளை விட, தங்கள் துணைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். சில சமயங்களில் உறவுகள் இடையே சச்சரவு, சமூக இயக்கவியல் மற்றும் நடைமுறைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

காதலே சரணம்: ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிப்பதால் மற்ற எல்லோரையும் புறந்தள்ளி விட்டு, அன்புக்குரியவர் மீது மட்டும் அதிக கருணை, நேச உணர்வு பொங்கும்.

உடல் அறிகுறிகள்: காதலில் ஈடுபட்டு இருப்பது இதயத் துடிப்பு அதிகரிப்பு, வியர்த்தல் மற்றும் உற்சாகம் போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தும். இது பெரும்பாலும். ‘வயிற்றில் பட்டாம்பூச்சிகள்’ படபடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT