social network
social network 
வீடு / குடும்பம்

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

பொ.பாலாஜிகணேஷ்

ரு காலகட்டத்தில் மக்களை திரைப்படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அது மெல்ல மாற, தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்பொழுதெல்லாம் என்ன விவாதம் நடைபெறும் என்றால் திரைப்படம் பார்ப்பது நல்லதா? கெட்டதா? பிறகு டிவி பார்ப்பது நல்லதா? கெட்டதா? என ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

அதேபோல் தற்போது சமூக வலைதளங்கள் மக்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஒரு வினாடி கூட சமூக வலைதளங்களில் இருந்து வெளியே வர முடியாத நம்மில் பலர் இருக்கிறார்கள். பத்து நிமிடம் சமூக வலைதளம் ஏதாவது ஒன்று முடங்கிப் போய்விட்டால் உடனே அதுவே அந்த நேர ட்ரெண்டிங் செய்தியாக வெளியாகிறது.

சினிமா, தொலைக்காட்சி இந்த இரண்டிலும் நன்மையும் தீமையும் இருந்ததை நாம் உணர்ந்தோம். அதேபோல், சமூக வலைதளங்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். எது நன்மை? எது தீமை என்பதை இந்தப் பதிவில் அறிவோம்.

நன்மைகள்: சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி. பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

உறவுகளுக்குப் பாலம்: தனது குடும்பத்தைப் பிரிந்து சென்று அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி, நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

வணிக வளர்ச்சி: வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

கருத்துப் பரிமாற்றம்: பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும். அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

தீமைகள்: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஏமாற்று வேலைகள்: இணையத் தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

குற்றங்கள்: சமூக வலைதளங்களின் உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலீசாருக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.

அதிகப் பயன்பாட்டின் விளைவு: அலைபேசியில் 24 மணி நேரமும் சமூக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பார்கள். அதேபோல், சமூக வலைதளங்களை அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம். நல்ல விஷயங்களுக்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோம்.

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

SCROLL FOR NEXT