5 elements used in interior design Image Credits: ArchDaily
வீடு / குடும்பம்

இன்டீரியர் டிசைனில் பயன்படுத்தப்படும் முக்கியமான 5 Elements என்னென்ன தெரியுமா?

நான்சி மலர்

ந்தியர்கள் எப்படி வீடு கட்டுவதற்கு வாஸ்து சாஸ்த்திரம் பார்க்கிறார்களோ அதேபோல, சீனர்கள் ‘பெங்சூய்’ என்னும் வாஸ்துவை பின்பற்றுகிறார்கள். இந்த முறை தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது. பலரும் பெங்சூய்யை விரும்புவதால் அதை இன்டீரியர் டிசைனிலும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

பெங்சூய் முறைப்படி நிச்சயமாக இருக்க வேண்டிய 5 Elements நெருப்பு, தண்ணீர், மரம், நிலம், மெட்டல் ஆகியவற்றை வீட்டினுள் ஏதோ ஒரு பொருளின் மூலமாகக் கொண்டு வரும்போது அந்த இடம் முழுமை பெற்று எல்லா செல்வ செழிப்பும் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மரம் (Wood): வீட்டில் உள்ள பர்னிச்சர், பெஞ்சுகள் போன்றவற்றை மரத்தால் செய்து வைப்பது சிறந்தது. இது வளர்ச்சி, விரிவடைதல், புதிய தொடக்கம் போன்றவற்றை உணர்த்துகிறது. நீலம், பச்சை ஆகிய நிறங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. கிழக்கு மற்றும் தென்கிழக்கில் இதை அமைப்பது நல்லது.

நெருப்பு (Fire): நெருப்பு, Passion and energyஐ உணர்த்துகிறது. சாதாரணமாக மெழுகுவர்த்தியை வீட்டில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் வீட்டில் வைக்கப்படும் Artworkல் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்று நெருப்பு சம்பந்தமான நிறத்தை பயன்படுத்தினாலே போதுமானது. இதை வீட்டில் வைப்பதால் பெரிய மாற்றமும், வளர்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதை தெற்கு பகுதியில் வைப்பது சிறந்தது.

பூமி (Earth): Earth elementஐ வீட்டில் வைப்பதால் பாதுகாப்பு மற்றும் நிலையானத் தன்மையை உணர்த்துகிறது. Ceramic pot, fibre rug, earthly tones painting in the wall இதுபோன்றவற்றை வீட்டில் வைப்பது போதுமானதாகும். இதற்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவது சிறந்தது. இதை தென்மேற்கு அல்லது வடகிழக்கு பகுதிகளில் வைப்பது சிறந்தது.

உலோகம் (Metal): மெட்டலை வீட்டில் வைப்பது தூய்மை மற்றும் துல்லியத்தை உணர்த்துகிறது. இதை பர்னிச்சர் கால்களில் பயன்படுத்தலாம், கண்ணாடி பிரேம்களில் பயன்படுத்தலாம்.வெள்ளை, சில்வர் போன்ற நிறங்களை பயன்படுத்துவது சிறந்தது. இதை மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் வைப்பது நல்லது.

தண்ணீர் (Water): தண்ணீரை வீட்டினுள் பயன்படுத்துவது Flow and adaptabilityஐ உணர்த்துகிறது. Fountain, மீன் தொட்டி, மிதக்கும் மெழுகுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தலாம்.கருநீலம், கருப்பு போன்ற நிறங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. வடக்கு திசையில் தண்ணீர் சம்பந்தமான Decorations அமைப்பது நல்லது. இந்த 5 Elementsஐயும் உங்களுடைய வீட்டின் இன்டீரியரில் சேர்த்துப் பாருங்கள். நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

SCROLL FOR NEXT