பெண்களின் நட்பு வட்டம் https://www.amightygirl.com
வீடு / குடும்பம்

திருமணத்திற்குப் பின்பு பெண்களின் நட்பு வட்டம் முறிந்துபோவது ஏன் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ரு குடும்பத்தில் பெண்களுக்குத்தான் எத்தனை பொறுப்புகள், எத்தனை சுமைகள், எத்தனை எதிர்பார்ப்புகள். அத்தனையையும் ஈடு கொடுத்து நடந்து கொள்வதில் அவர்களின் நட்பு வட்டம் தொலைந்தே போய் விடுகிறது. காலத்தின் கட்டாயம், சூழ்நிலை போன்றவற்றால் கூட பெண்களின் நட்புகள் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றன. திருமணத்திற்குப் பின்பு பெண்களின் நட்பு வட்டாரம் படிப்படியாகக் குறைந்துபோவதைக் காணலாம். இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, நட்பு வட்டத்தில் அவர்களால் முன்பு போல் பழக முடிவதில்லை. காரணம், நேரமின்மை மற்றும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாததும் ஒரு காரணமாகின்றது. அது மட்டுமின்றி, குடும்பப் பொறுப்புகள் அதிகமாவதும் ஒரு முக்கியமான காரணமாகும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நம் முழு கவனமும் சென்று விடுவதால் நட்பு வட்டாரத்தைப் பராமரிக்க நேரமில்லாமல் போகின்றது.

குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்வதால் தங்கள் நட்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்கள் தங்கள் பால்ய நண்பர்களிடம் இருந்து விலகி விட நேர்கின்றது. இதனால் நட்பு வட்டம் சுருங்கி விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு வார விடுமுறை நாட்களைக் கூட குடும்பத்திற்கே செலவிட நேர்கிறது. அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் வார இறுதி நாட்களில்தான் ஒரு வாரத்திற்கு தேவையான வேலைகளை முடித்து வைக்க வேண்டி உள்ளது. அப்போதுதான் வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை அவர்களால் டென்ஷன் இல்லாமல் ஓட முடியும். இதனால் அவர்களால் நட்பு வட்டத்துடன் தொடர்புகொள்ள நேரம் கிடைப்பதில்லை.

பள்ளி, கல்லூரி காலங்களில் நம் நண்பர்களிடம் நமக்கு இருக்கும் நெருக்கம் மற்றும் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு பின்பு நீடிப்பது கிடையாது. இதனால் நட்பின் தேவையும் குறைந்து குடும்பத்தில் ஈடுபாடு, பொறுப்பு அதிகமாகி விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு நம்முடைய வாழ்க்கைத் துணையும் நம் நண்பர்களுடனான நட்புறவு முறியக் காரணமாகி விடுகிறார்கள். நட்புறவை வளர்க்க முடியாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு அனைத்து முடிவுகளையும் ஒரு பெண்ணால் எளிதாக எடுக்க முடிகின்றது. எந்த நண்பருடன் பழக வேண்டும், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சினிமா, ஹோட்டல் என்று செல்ல சுயமாக முடிவெடுக்க முடிகிறது. இதுவே திருமணம் ஆனதும் எல்லாம் கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணத்திற்கு பின் அவர்களால் தாங்கள் விரும்பும்  விஷயங்களை சுயமாக செய்ய முடிவதில்லை. அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. நம் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நடந்துகொள்ள வேண்டியுள்ளது.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய நட்பை இழக்க வேண்டும் என்று எந்த விதியும் கிடையாது. ஆனால், சில நேரங்களில் பெண்கள் தாமாகவே திருமணத்திற்குப் பிறகு தங்களது நட்பை முறித்துக் கொள்கிறார்கள். சிலர் தங்களின் செல் போன் நம்பர்களை மாற்றுவதன் மூலமும் பழைய நட்பை இழந்து விடுகிறார்கள்.

நம் சமூகத்தில் பெண் - பெண் நட்புக் கூட ஓரளவு தொடர்ந்து விடுகிறது. ஆனால், பெண் - ஆண் நட்பானது திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் முறிந்துதான் விடுகின்றன. இதற்கு சமூகமும், சில இடங்களில் நடைபெறும் தவறுகளும் காரணமாகின்றன. முக்கியமாக, பெண்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களின் நட்பு தொடரவோ முறியவோ செய்கின்றது.

சுவையான மஞ்சள் பூசணி ப்ரை-வேர்க்கடலை ஸ்வீட் ரெசிபிஸ்!

மறுபிறவி எடுத்ததுபோல உணர்கிறேன் – வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

15 கடவுளுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!

தண்டுக்கீரையின் தரமான மருத்துவப் பலன்கள்!

காய்கறிகள் கலவை வெஜிடபிள் கூட்டு வகைகள்!

SCROLL FOR NEXT