Essential Nutrients and Foods for Over 30s https://www.healthkart.com
வீடு / குடும்பம்

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசியம் தேவைப்படும் சத்துக்களும் உணவுகளும்!

எஸ்.விஜயலட்சுமி

ற்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதிலேயே இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வருகின்றன. எனவே, ஒருவர் தன் உடலை மிகவும் ஆரோக்கியமாக பாதுகாப்பது மிகவும் அவசியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேவைப்படும் சத்துக்களும் அவை சார்ந்த உணவு வகைகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கால்சியம் சத்து: ஒருவருடைய எலும்பு வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புருக்கி நோய் வராமல் தடுப்பதற்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. பால் பொருட்கள் கீரைகள் மற்றும் இலை காய்கறிகளில் ஏராளமான கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன.

வைட்டமின் டி: ஒருவருக்கு கால்சியம் சத்து உடலில் சேர வேண்டுமானால் வைட்டமின் டியும் மிகவும் தேவை. இது ஒருவரின் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. இது சூரிய ஒளியிலும் மீன் வகைகளிலும் இருக்கிறது.

மெக்னீசியம்: தசைகள் உறுதிக்கும், நன்றாக செயல்படுவதற்கும் இதயம் ஆரோக்கியமாக செயல்படுவதற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் மெக்னீசியம் அவசியம். இது விதைகள், முழு தானியங்கள், இலைக் காய்கறிகள் மற்றும் நட்ஸ்களில் உள்ளன.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்: மூளை நன்றாக இயங்கவும் இதயம் சிறப்பாக செயல்படவும் இந்த சத்து தேவை. இது சால்மன் என்ற மீன் வகைகளிலும் வால்நட், ஆளி, சியா விதைகளிலும் இருக்கிறது.

வைட்டமின் பி12 : நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் இந்த சத்து தேவை. இது விலங்குகளில் இருந்து பெறப்படும் இறைச்சி வகைகள், மீன் முட்டை யில் கிடைக்கிறது.

பொட்டாசியம்: இது இரத்த அழுத்தத்தை சீர் செய்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. பொட்டாசியம் சத்து வாழைப்பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, பசலைக்கீரை பீன்ஸ்களில் நிறைந்திருக்கிறது.

நார்ச்சத்து: ஒருவரின் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்வதற்கும் இரத்த சர்க்கரை அளவு சரியாக இருப்பதற்கும் உடல் எடை கூடாமல் இருப்பதற்கும் நார்ச்சத்து அவசியம். இது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்து இருக்கிறது.

இரும்புச்சத்து: இரத்த சோகையை தடுப்பதற்கும் உடல் முழுவதும் ஆக்சிஜன் தங்கு தடை இன்றி செல்வதற்கும் இரும்புச்சத்து அவசியம். இது சிவப்பு இறைச்சி, பீன்ஸ், முருங்கைக்கீரை, இறால்  வகைகளில் நிறைந்திருக்கிறது.

வைட்டமின் சி: நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவதற்கும் இளமையாக தோற்றமளிப்பதற்கும் சரும பளபளப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி போன்றவற்றில் ஏராளமாக உள்ளது வைட்டமின் சி.

துத்தநாகம்: உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தருவதற்கும், புண்கள் ஏற்பட்டால் அவற்றை விரைவில் குணமாக்குவதற்கும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதற்கும் இந்த சத்து தேவை. ஆயிஸ்டர். பன்றி இறைச்சி. கோழி மற்றும் உலர் பழங்களில் இது ஏராளமாக இருக்கிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT