வீடு / குடும்பம்

ஒரு ஸ்பூன் நெய் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கும்!

விஜி

நெய்யில் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. காலம் காலமாக நாம் சமைலுக்குப் பயன்படுத்தும் நெய் நம்மை உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அழகாக்கும் வல்லமை கொண்டது.

நெய்யின் கொழுப்பில் உள்ள கரையக்கூடிய வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, D, K, E மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கின்றன. மேலும், இதில் நிறைந்துள்ள உணவுக் கொழுப்பு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கான சிறந்த மூலப்பொருளாக அமைகிறது. இதனால்தான் பலரும் நெய்யை உணவுப் பொருளாக உட்கொண்டு அதன் பயனைப் பெறுகின்றனர்.

நெய்யை முகத்தில் தடவினால் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா? பெண்களின் பல பிரச்னைகளுள் ஒன்று வறட்சியான சருமம், பொலிவின்மை, முகப்பரு உள்ளிட்டவைதான். பலரும் இதற்காக மாய்ஸ்ட்ரைசர் க்ரீம், ஃபேஸ் வாஷ் என பலவற்றை பயன்படுத்தி வந்தாலும், அவை தற்காலிக பலன்தான் கொடுக்கும். தினமும் அதைப் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

ஆனால், இயற்கை நமது அனைத்துப் பிரச்னைகளுக்கும் வரப்பிரசாதம் அளித்துள்ளது. அப்படி முகத்தின் அழகுக்காக இயற்கை கொடுத்த வரப்பிரசாதம்தான் நெய். இதை ஒரு மாத காலம் தவறாமல் முகத்தில் தடவி வந்தால் எண்ணெற்ற நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஈரப்பதமாக்குதல்: நெய் மிகவும் வழுவழுப்பாக இருப்பதாலும், அதில் நீர்ச் சத்து உள்ளதாலும் உங்கள் வறண்ட சருமத்தை அது ஈரப்பதமாக்குகிறது. ஒரு ஸ்பூன் நெய் எடுத்து உங்கள் உடம்பின் வறண்ட இடங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்தாலே போதும்.

சுருக்கங்கள் நீங்கும்: முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் நெய் தடவுவது நல்ல தீர்வாகும். நெய்யில் விட்டமின் இ இருப்பதால் சருமத்தின் அழகை அது மேம்படுத்துகிறது.

ஜொலிக்கும் முகம்: உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் எடுத்து தடவி தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இதனால் உங்கள் முகம் பிரெஷாக ஜொலிக்கும். மேலும், கண்களை சுற்றியுள்ள கருவளையங்களும் நீங்கும்.

வறண்ட உதடு: வறட்சியான உதட்டால் அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உதட்டின் மேல் வெள்ளை வெள்ளையாக தெரிவதால் உங்கள் அழகே கெடும். இதற்குத் தீர்வாக பலரும் லிப் பாம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நெய் தடவி வந்தால் இந்த வறண்ட தன்மை நிச்சயமாக மாறும்

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT