வீடு / குடும்பம்

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் காலைநேர ரொட்டீன் என்ன தெரியுமா?

கல்கி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தினமும் அவரது காலைநேர ரொட்டீன் என்ன?

இதுகுறித்து கடந்த 2016-ம் ஆண்டு அவர் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் எல்லா வீடுகளிலும் காலையில் சீக்கிரமாக எழுவதையே விரும்புவார்கள். அதுவே எனக்கும் சிறுவயதிலிருந்து பழக்கமாகி விட்டது. அதனால் இப்பவும் தினமும் காலை 6:30 முதல் 7 மணிக்குள் எழுந்து விடுவேன். பின்னர், எல்லா வீடுகளிலும் இருப்பது போலவே, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. அநத வகையில் நான் விரும்பிப் படிப்பது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பேப்பர் மற்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் ஆகும். அதுவும் தவிர சுடச்சுட தேநீர் அருந்தியபடி படிப்பது மிகவும் பிடிக்கும். அதேபோல காலநேர சிற்றுண்டிக்கு என்னுடைய சாய்ஸ் ஆம்லெட் மற்றும் பிரெட் டோஸ்ட். இவை செய்வது ஈசி. சாப்பிட்டாலும் ஹெவியாக இல்லாமல் லைட்டாக உணர வைக்கும். சிறுவயதில் சென்னையில் இருந்தபோது காலை சிற்றுண்டியாக இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றை சாப்பிட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது.

இவ்வாறு சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT